ஹரிபாஸ்கர் மீது குற்றச்சாட்டு பதிவு
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக ரூ 72.44 லட்சம் சேர்த்த வழக்கில் தமிழக முன்னாள் தலைமைச் செயலர் என். ஹரிபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது தனி நீதிமன்ற நீதிபதி தார்வேஷ் இந்தக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். ஹரிபாஸ்கர், அவரது மனைவி கோமதியம்மாள் உஷா தேவி,மகள் சித்ரா நாராயணி மற்றும் மருமகன் சுதிர். வி.ராஜன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஹரிபாஸ்கரின் உறவினர்கள் மீது ஏப்ரல் 11 ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
ஹரிபாஸ்கர் மீது ஊழல் தடுப்புப் பிரிவுச் சட்டத்தின் கீழும், அவருக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதும்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
1986ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தமிழக மின்வாரியத் துறை உயர் அதிகாரியாகவும், மாநில தலைமைச் செயலராகவும் ஹரிபாஸ்கர் இருந்தார்.தனது பதவிக் காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக தன் பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் ஹரிபாஸ்கர் சொத்துசேர்த்திருந்தார்.
யு.என்.ஐ.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications