தாமதமாகிறது இந்திய போர் விமான தயாரிப்பு
டெல்லி:
இந்தியாவின் இலகுரக போர்விமானங்கள் (எல்.சி.ஏ.) தயாரிப்பு திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவை இந்திய விமானப்படையில்சேர்த்துக் கொள்ளப்படுவதும் தாமதமாகி வருகிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் தெரிவித்துள்ளார்.
புதனன்று பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.
போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு பின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்த தடையால் இலகு ரகு போர்விமானங்கள் தயாரிப்பு திட்டத்தில்தாமதம் ஏற்பட்டு வந்தது.
கடந்த ஜனவரியில் முதன்முறையாக சோதிக்கப்பட்ட இந்த விமானங்கள் 2003ம் ஆண்டில் விமானப்படையில் சேர்க்கப்படும்.
இந்திய விமானப்படையில் முக்கிய பங்காற்றி வரும் மிக் 21 வகை விமானங்கள் சமீப ஆண்டுகளில் அதிகம் விபத்துக்குள்ளாவதால் அவற்றிற்குமாற்றாக இந்திய இலகு ரக போர்விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இவற்றின் தயாரிப்பில் ஏற்பட்டு வரும் தாமதம் காரணமாக, விமானப்படையில் உள்ள மிக்21 வகை போர்விமானங்களை 1200 கோடி ரூபாய்செலவில் மேம்படுத்த ரஷிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இந்த விமானங்கள் பல்வேறு வகை போர் சாதனங்கள் பொருத்திய பின் பரிசோதிக்கப்பட்டு இந்தியவிமானப்படையில் சேர்த்துக் கொள்ள இன்னும் பத்து வருடங்கள் ஆகலாம் என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications