ஸ்ரீதேவியின் மைத்துனருக்கு அதிமுக சீட் கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை ஸ்ரீதேவியின் சகோதரி லதாவின் கணவரும், ஜெயலலிதா ஆட்சியின் போது விருதுநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான சஞ்சய் ராமசாமிஅ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருகிறார்.

ஜெயலலிதா ஆட்சியின் போது விருதுநகர் எம்.எல்.ஏவாக இருந்தவர் சஞ்சய் ராமசாமி. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட இவர் தற்போது அ.தி.மு.கவில் சேர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

சஞ்சய் ராமசாமியின் தந்தை ராமசாமி ஓய்வுபெற்ற நீதிபதி. ஊழல் வழக்குகளில் ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கியதன் காரணமாக இவருக்குகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட சீட் கிடைத்தது. ஆனால் இவர் தோற்றுப் போனார்.

தற்போது இவர் தனது மகனான சஞ்சய் ராமசாமிக்கு விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் சீட் கேட்டு வருகிறார்.

வழக்கு விஷயமாக போயஸ் தோட்டத்துக்கு அடிக்கடி சென்று வந்த போது ஜெயாவின் தோழி சசிகலாவும், ராமசாமியின் மனைவியும் நண்பிகள்ஆகிவிட்டனர். அந்த நட்பின் அடிப்படையில் ராமசாமியின் மனைவி, தனது மகனுக்கு சீட் கேட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+