இதோ, இனனொரு அரசியல் கட்சி!

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் திராவிட மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் புதன்கிழமை புதியகட்சி உதயமாகியுள்ளது.

தமிழ்நாடு நாடார் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை திருச்சியில் நடந்தது. பொதுக்குழுக்கூட்டத்தில் திராவிட மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் அரசியல் கட்சி தோற்றுவிப்பது என்ற தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டம் முடிந்த பின் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் திராவிட மக்கள் காங்கிரஸ்கட்சியை ஆரம்பித்துள்ளோம். ஜாதி, மத வேறுபாடின்றி தோழமை உணர்வுடன் திராவிட மக்கள் காங்கிரஸ் கட்சிசெயல்படும்.

வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடனும் கூட்டு சேராமல் திராவிட மக்கள் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும்.தமிழகத்தில் 100 இடங்களில் நாங்கள் போட்டியிட இருக்கிறோம். இதற்கான வேட்பு மனுத்தாக்கல் புதன்கிழமைமுதலே தொடங்கி விட்டது.

திருச்சியில் மட்டும் 17 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள். தமிழகம் முழுவதும் 200 பேர் வேட்புமனுகொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

பொதுத் தொகுதிக்கு ரூ 2 ஆயிரமும், தனித்தொகுதிக்கு ரூ 1000மும் வேட்புமனுக் கட்டணமாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+