எஸ்.எஸ்.சந்திரனை வெட்ட முயற்சி
சென்னை:
ஜெயலலிதா பிறந்த நாள் விழா தொடர்பாக நடத்தப்பட்ட அ.தி.மு.க.பொதுக்கூட்டத்தில் வெறித்தனமான தாக்குதல் நடந்தது.
இதில், நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சென்னை எழும்பூர் வட்டார அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது. இதையொட்டி சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல் பகுதியில்,புதன்கிழமை பொதுக்கூட்டம் நடந்தது.
இரவு 7 மணிக்குக் கூட்டம் துவங்கியது. பலர் பேசிய பிறகு 9.30 மணியளவில்சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசத்தொடங்கினார்.
அப்போது திடீர் என ஒரு கும்பல் அங்கு வந்தது. அங்கிருந்த டியூப் லைட்டுகளைஅவர்கள் உடைத்தனர். பிறகு தொட்டி நிறைய கொட்டி வைக்கப்பட்டிருந்த கற்களைஎடுத்து கூட்டத்தினர் மீது வீசத்தொடங்கினர்.
அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது.
கல்வீச்சில் இறங்கிய கும்பல் பின்னர் மேடையை நோக்கி முன்னேறியது. மேடையில்இருந்த நடிகர் எஸ்.எஸ். சந்திரனை அரிவாளால் தாக்க அவர்கள் முயன்றனர்.
ஆனால் மேடையில் இருந்த அ.தி.மு.கவினர் அவரைச் சுற்றி நின்று காப்பாற்றினர்.பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இந்தக் கல்வீச்சு கலாட்டாவில் 2 பேர் காயமடைந்தனர். அரிவாள் வெட்டில் 6 பேருக்குகாயம் ஏற்பட்டது.
சம்பவத்தைக் கண்டித்து, அ.தி.மு.கவினர் சேத்துப்பட்டு காவல்நிலையம் முன் திரண்டுமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக துணைக் கமிஷனர்கள் சந்திரசேகர்,துரைராஜ், உதவிக் கமிஷனர்கள் ரங்கராஜன், அந்தோணிசாமி ஆகியோர் விரைந்துவந்து கூட்டத்தினரை அமைதிப்படுத்தினர்.
சேத்துப்பட்டுப் பகுதியில் மீண்டும் கலவரம் வெடித்து விடாமல் தடுக்க பலத்த போலீஸ்பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications