மதுரையை கலக்கிய வெடிகுண்டு பீதி
மதுரை:
மதுரை ஈஸ்ட் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, மானாமதுரை - மதுரை ரயில் ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஸ்டேஷன் மாஸ்டர் முத்துத்தேவர் பாண்டியன் கூறியதாவது:
மதுரை ஈஸ்ட் ரயில் பாதையில் வெடிகுண்டு போன்ற ஏதோ ஒரு பொருள் கிடந்ததாகவும், அதன் பக்கத்தில் கடிகாரம் ஒன்று இருப்பதாகவும்போர்ட்டர் கூறினார்.
இதையடுத்து, அது டைம் வெடிகுண்டாக இருக்கலாம் என்று கருதி அந்த நேரம் வரவிருந்த மானாமதுரை - மதுரை ரயிலை நிற்க வைத்தேன். பின்னர்போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் மோப்பநாய்ப்படை மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையில் அது வெடிகுண்டு இல்லை என்றும், வாக்மென், ஆடியோ கேஸட் மற்றும் சிறிய அலாரம் ஆகியவை சிவப்பு நிற தாளில் சுற்றப்பட்டுவைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் கூறினார்.
பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்று விஷக்கிருமிகள் சிலர் இங்கு வாக்மெனை, கடிகாரத்துடன் சேர்த்து வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகபோலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications