இன்றைய தினப்பலன்

Subscribe to Oneindia Tamil

கேள்வி - பதில்

கே:ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியை ஆயுள்காலம் வரை சிறையில் வைப்பேன் என்று பேசிய ஜெயலலிதாவுக்கு, தாங்கள் சட்ட உதவி செய்வது (ஊழலில்இருந்து தப்பிக்க) எந்த விதத்தில் நியாயமானது?

ப: ஜெயலலிதாவின் இந்த மாதிரி பேச்சுக்கள் பற்றி ஏற்கனவே நான் கண்டனம் தெரிவித்திருக்கிறேன். இது ஒருபுறமிருக்க, அவருக்கு சட்டரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ நான் எந்த உதவியும் செய்யவில்லை.

கே:அரங்கநாதர் கோயிலுக்கும் சென்று கொண்டு, தேசிய லீக்கின் மதச்சார்பற்ற மாநாட்டிலும் பங்கு கொள்ளும் ஜெயலலிதாவின் ஸெக்யுலரிஸம்பற்றி ...?

ப: குங்குமப் பொட்டு, தீ மிதித்தல் போன்றவற்றைக் கண்டித்துக் கொண்டு, ரம்ஜான் நோன்பில் கஞ்சி குடிக்கும் ஸெக்யுலரிஸத்தைப் போன்றதுதான் இதுவும்.

கே: ஒரு வழியாக ராஜ்குமார், சென்னை வந்து கலைஞருக்கு நன்றி சொல்லி விட்டாரே?

ப: என்ன பிரயோஜனம்? முதல்வருக்கே அதில் திருப்தியில்லை. அதனால்தான் இதை ஒரு பெரிய செய்தியாக்காமல் விட்டு விட்டார்கள். ராஜ்குமார்அதிகமாக நிருபர்களிடம் பேசி விடாமல் திரும்பிப் போய்ச் சேர்ந்தாரே - அதில்தான் முதல்வருக்கு முழு திருப்தி இருக்கும்.

கே: குஜராத் பூகம்பப் பேரழிவுக்கு பாகிஸ்தான், வலிய அனுப்பிய நிவாரணப் பொருட்களை இந்தியா பெற்றுக் கொண்டது சரியா ...?

ப: இதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+