இன்றைய தினப்பலன்
கேள்வி - பதில்
கே: சட்ட திருத்தங்கள் மூலம், சமுதாய முன்னேற்றத்துக்கு வழி வகுக்க முடியுமா?
ப: முடியும். உலகின் பல நாடுகளிலும் - இந்தியா உட்பட இது நடந்திருக்கிறது.
கே: ஒருவேளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், எதிர்க் கட்சிகள் மீது பழி வாங்கும் படலம் மும்முரமாக இருக்கும் அல்லவா?
ப: அதற்கு நிறையவே வாய்ப்புண்டு.
கே: சோவின் வாக்குறுதிகளை ஏற்று, வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வுடன் த.மா.கா. கூட்டணி சேர்ந்து போட்டியிட இருப்பதாக, தினமலர்பத்தரிக்கையில் செய்தி வெளியாகி இருப்பது பற்றி ...?
ப: முழுமையான கற்பனை. சிறுகதை பகுதியில் வெளியிட வேண்டியதை, செய்திப் பகுதியில் வெளியிட்டிருக்கிறார்கள்.
கே: பெரிய அரசியில் கட்சிகள், தொகுதியில் எந்த ஜாதிக்கார்ரகள் அதிகம் இருக்கிறார்கள் என்று பார்த்து, அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்குத்தான்சீட் கொடுக்கிறார்கள். இதில் எங்களை மட்டும் ஜாதிக் கட்சிகள் என்று சொல்வது நியாயமா? என்று ஏ.சி.சண்முகம் கூறியிருப்பது பற்றி ...?
ப: பெரிய கட்சிகள் ஜாதியை மட்டுமே நம்பி விடுவதில்லை. சாராயம், பணம், கள்ள ஓட்டு, அடியாள் ... என்ற பல விஷயங்களோடு ஜாதியையும்நம்புகின்றன.
ஆனால் ஜாதிக் கட்சிகளோ ஜாதியை மட்டுமே நம்புகின்றன. அதனால்தான் அவைகளை மட்டும் ஜாதிக் கட்சிகள் என்று சொல்கிறார்கள்.
கே: கொள்ளையடித்துப் பணம் சேர்க்கும் அரசியில்வாதிகளும், அதிகாரிகளும், வியாபாரிகளும், - ஒரு விதமான மன நோய்க்குஆட்பட்டிருக்கிறார்கள் - என்ற கருத்து உண்மையா?
ப: கற்பழிப்பிலிருந்து, நாட்டுக்கு எதிரான கலகம் வரை எந்தக் குற்றம் நடந்தாலும் உடனே இதெல்லாம் ஒரு விதமான மனநோய்.
இந்த நோயைத்தான் குணப்படுத்த வேண்டும்: குற்றத்தைச் செய்த மனிதனை தண்டிப்பதில் அர்த்தமில்லை என்ற வாதம் மேலை நாடுகளில் ஆரம்பித்து, இங்கும்பரவத் தொடங்கி விட்டது.
என்னைப் பொறுத்தவரையில் இது ஓர் ஆபத்தான அணுகுமுறை. இந்த மாதிரி எண்ணங்களை வளர விடுவது எந்த சமூகத்திற்கும் நல்லதல்ல.
கே: என்னை அவமானப்படுத்தியதால், கொலை செய்யச் சொன்னேன் என்று மிசா பாண்டியன் கூறியுள்ளாரே?
ப: போலீசார் மிரட்டியதால் அப்படிச் சொன்னேன் - என்று பிறகு சொல்லி விட அவருக்கு எத்தனை நேரமகும்?
கே: பகைவரிடமும் நட்பு கொள்ள வேண்டியதது வரும் என்கிறாரே வைகோ?
ப: இந்த மனப்பக்குவம் இல்லை என்றால், தி.மு.க.வுடன் அவர் எப்படி நட்பு கொண்டிருக்க முடியும்?
கே: வைகோ, ராமதாஸ் இவர்களெல்லாம் புலிகளைப் பற்றி இப்போது அதிகம் வாய் திறப்பதில்லையே, ஏன்?
ப: அது மட்டுமா? நெடுமாறன் கூட கொஞ்ச நாளாக எதுவும் பேசுவதில்லை. இந்த மெளனங்கள் அர்த்தமுள்ளவை.
தேர்தல் முடிகிற வரை நீங்கள் எல்லாம் பேசாமல் இருங்கள். அப்போதுதான் நாங்கள் ஜெயித்து வர முடியும். நாங்கள் தோற்றுவிட்டால்.உங்களுக்கெல்லாம் ஆபத்து.
அதனால் எங்களை ஜெயிக்க விடுங்கள். நாங்கள் ஜெயித்து மீண்டும் வந்த பிறகு, உங்களுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது? ஆட்சியேஉங்களுடையதுதான் என்று இவர்களிடமெல்லாம் பேரம் பேசப்பட்டிருக்கிறதோ, என்னவோ?
கே: அரசியலில் திருடர்கள் இருப்பது ஏன்?
ப: பணம் இருக்கிற இடத்திற்கு திருடன் போகாமல் இருப்பானா?
கே: இடைக்கால நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) ஒன்றுமே இல்லை என்று கூறி, அதை தமிழக சட்டசபையில் இருந்த குப்பைத் தொட்டியில் அ.தி.மு.க.உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் கிழித்தெறிந்த நிகழ்ச்சி பற்றி ...?
ப: என்ன செய்வது? இந்த மாதிரி செயல்கள்தான் ஒரு கட்சியில் ஒருவருக்குள்ள விசுவாசத்தைக் காட்டுகின்றன என்ற நிலை வந்து விட்டது.
எவ்வளவுக்கெவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார்களோ. அவ்வளவுக்கவ்வளவு கட்சியில் நல்ல பெயர் என்று ஆகிவிட்ட பிறகு, இந்தமாதிரி நிகழ்ச்சிகள் மலியத்தான் செய்யும்.
கே: குஜராத் பூகம்ப நிதி திரட்டுவதற்காக, ஆளாளுக்கு உண்டியல் தூக்கி வசூல் செய்து வருவது பற்றி ...?
ப: இது தேவையுமில்லை, நல்லதும் இல்லை என்பதுதான் என் கருத்து.
பிரதம மந்திரியின் நிவாரண நிதி, அதன் சார்பில் திரட்டப்படுகிற முதல்வரின் நிதி - ஆகியவற்றுக்கு எல்லோரும் நிதி கொடுக்க வேண்டும் என்றபிரச்சாரம் பலமாக நடந்தாலே போதும். தலைக்கு தலை நிதி திரட்டுவது எனக்கு உடன்பாடான விஷயமல்ல.
கே: கருணாநிதி, முரசொலி மாறன் - வாக்காளர் அடையாள அட்டை குழப்பம் பற்றி தங்கள் கருத்து?
ப: யார் பெயரில் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், இந்த அட்டைகளை வாங்கி விட முடியும் என்பதற்கு அடையாளம் இவை.
அடையாள அட்டை, கள்ள அட்டையாகிக் கொண்டிருக்கிறது என்ற என் சந்தேகம் இப்போது மேலும் கூடுகிறது.
கே: பெண்கள் பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்தி, உங்களை சிறப்பு விருந்தினராக அழைத்தால் ...?
ப: அவசியம் இருக்காது. நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர்களாகவே கலைந்து சென்று விடுவார்கள்.












Click it and Unblock the Notifications