பாட்சாவுக்கு சிறை: வெடிகுண்டு மிரட்டல்-கோவையில் தீவிர பாதுகாப்பு
கோவை:
கோவை வெடிகுண்டு சம்பவத்தின் பின்னணியாக விளங்கிய அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த பாட்ஷாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் திருப்பூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டுமிரட்டல் கடிதம் வந்தது.
பாட்சாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாட்ஷாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் அத்வானியைக் கொல்லவும், நகரில் கலவரத்தை உருவாக்கும்நோக்கத்துடனும் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பிற்கு அல்-உம்மா இயக்கம் காரணமாக இருந்தது எனக் கருதிஅந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.
இந்த இயக்கத்தின் தலைமைச் செயலமாக செயல்பட்ட சென்னையில் உள்ள ஓரு வீட்டில் வைத்து அல்-உம்மா இயக்கத் தலைவர்பாட்ஷா உட்பட 13 பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள்கைப்பற்றப்பட்டன.
வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் பாட்ஷாவுக்கு 4 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையின் எதிரொலியாக அவரது சொந்த ஊரான கோவையில் ஏதாவது அசம்பாவிதம்நிகழலாம் எனக் கருதி கோவை நகரில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதிரடிப்படையினர் மற்றும் போலீசார்பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூரில் வெடிகுண்டு மிரட்டல்:
இந் நிலையில் திருப்பூர் ஜூடிசியல் நீதிமன்றத்திற்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போஸ்ட் கார்டில், "பாட்ஷாவைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும், இல்லையென்றால் கோவை நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் குண்டுகள்வெடிக்கும். எங்களது தாக்குதல் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். மனித வெடிகுண்டாகவும் இருப்போம்.இப்படிக்கு அல்-உம்மா நலம் விரும்பி என எழுதப்பட்டிருந்தது.
இதனால் திருப்பூர் நீதிமன்றங்களில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர். அங்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுசோதனையிடப்பட்டது. மேலும் வெடிகுண்டுகளைக் கண்டறியும் நவீன கருவிகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் எவ்வித குண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து நீதிமன்றம் வழக்கம் போல் செயல்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications