For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தி.மு.க முஸ்லீம்களின் நலனுக்காகப் பாடுபடும்: முதல்வர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல்படும் என்று முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமைதெரிவித்தார்.

முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 1,000 பேர் வியாழக்கிழமை தி.மு.க.வில் சேர்ந்தனர். இவர்களில் 500 பேர் பெண்கள்.

முஸ்லீம்கள் தி.மு.க வில் சேர்ந்தது குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், தமிழகத்தில் தி.மு.க அரசு முஸ்லீம்களின் நலனுக்காகப் பாடுபடும்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் முஸ்லீம் இன மக்களின் நலனுக்காக தி.மு.க அனைத்து உதவிகளையும் செய்யும்.

சேப்பாக்கம் தொகுதியிலிருந்து 1,000 முஸ்லீம்கள் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இது என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X