புத்தர் சிலையை காக்க இலங்கை தீவிர முயற்சி
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலைகளை காப்பாற்ற பாகிஸ்தான் உதவி கோர இஸ்லாமாபாத் விரைகிறார் இலங்கை பிரதமர்.
இலங்கை பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயகே, சனிக்கிழமையன்று பாகிஸ்தான் சென்று, உள்துறை அமைச்சர் மொய்னுதீன் ஹைதர் மற்றும் தலிபன்தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
ஆப்கனில் உள்ள புத்தரின் சிலைகளை தகர்க்கும் தலிபன்களின் முடிவை மாற்றக் கோருவார். பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஸாரப்பையும்விக்ரமநாயகே சந்திக்கிறார்.
ஏற்கனவே, பாகிஸ்தான் வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், லட்சுமண் கதிர்காமர், வெள்ளிக்கிழமையன்று பர்வீஸ் முஸாரப்பை சந்தித்துபேசும் போது ஆப்கன நடவடிக்கை பறறிய இலங்கையின் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஆப்கன் சென்றுள்ளார். அங்கு தலிபன்களை சந்தித்து புத்தர் சிலைகளை தகர்க்கும்உத்தரவை மாற்றுவது பற்றி விவாதிக்கிறார்.
லஸ்கர்-இ-தோய்பா, ஜமாத் உலேமா - இ- இஸ்லாம் போன்ற தலிபன்களுக்கு நெருக்கமான முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மூலம் ஹைதர்பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத் வரும் ஐ.நா.பொதுச்செயலாளர் கோபி அன்னான், பாகிஸ்தான் ஆட்சியாளருடன் இது குறித்து பேசுவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமையன்று ஜப்பானிய குழு ஒன்று காந்தஹாரில், தலிபன்களின் வெளியுறவு அமைச்சர் வாகில் அஹமது முத்தவாகிலை சந்தித்து பேச்சுவார்த்தைநடத்தியது.
நீண்ட நேரம் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் விவரம் தெரியவில்லை என பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள சானா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவலில், பாகிஸ்தான் அமைச்சரின் முயற்சி தோல்வியுற்றதாக கூறியுள்ளது.
புத்தர் சிலைகளை ஆப்கனிலிருந்து வெளியேற்றிக் கொள்வதோடு ஆப்கனுக்கு நிதியுதவியை அதிகரிக்கவும் பாகிஸ்தான் முன்வந்தது.
ஆனால், தலிபன் மதத்தலைவர்கள் இவற்றை மறுத்ததோடு, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான இச்சிலைகளை அழிக்க வேண்டுமே தவிரஇவற்றை நாட்டை விட்டு வெளியேற்ற கூடாது என கூறியுள்ளதாக தலிபன் அமைச்சர் முத்தவாகில் பாகிஸ்தான் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். ஐ.ஏ.என்.எஸ்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications