சொந்த மண்ணில் கேப்டனாக களமிறங்கும் கங்குலி
கோல்கத்தா:
இந்திய அணியின் பலம் அதன் பேட்டிங்கே. எனவே, பேட்டிங் வரிசையில் மாற்றமில்லை என்கிறார், சொந்த மண்ணில் அணித்தலைவரான பின் முதன்முறையாககளமிறங்கும் செளரவ் கங்குலி.
கோல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சிக்கு வந்த கங்குலி நிருபர்களுடன் பேசும் போது,
மும்பை டெஸ்டில் சரியாக ஆடவில்லை என்பதற்காக இந்தியாவின் பேட்டிங் வரிசை மாற்றப்பட மாட்டாது. இந்தியாவின் பலம் அதன் பேட்டிங்தான்.
2வது போட்டியில் கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற முன்னணி பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறை. இருந்தாலும், இந்த நேரத்தில் புதிய வீரர்களுக்குதிறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற வீரர்களை நம்பி இருக்க முடியாது.
எல்லா வீரர்களுக்கும் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்படும். அதுபோல்தான் தனக்கு மும்பை டெஸ்டில் ஏற்பட்டது. அதன் பாதிப்பு இந்தியாதோல்வியை தழுவியது.
கோல்கத்தா மைதானத்தில் இந்திய அணித்தலைவராக போட்டியில் பங்கேற்பது இதுவே முதல்முறை. சிறப்பான முறையில் வீரர்கள் விளையாட வேண்டும்.கடந்த 2 போட்டிகளின் போது நடைபெற்ற ரசிகர்களின் கலாட்டா இந்த முறை ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டார் கங்குலி.
இதனிடையே, 2வது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியாவின்தொடர் வெற்றியை தடுக்கும்.
மாறாக, ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இந்திய மண்ணில் 31 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.
இந்திய வீரர்களில் டெண்டுல்கரின் விக்கெட்டை கைப்பற்றுவதில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களிடையே போட்டியே நடக்கிறது.
இந்திய அணியில் ஜாகீர் கான், வெங்கடேஷ் பிரசாத் தவிர வெங்கடபதி ராஜூவும், ஹர்பஜன் சிங்கும் இடம் பெறலாம். 6 பேட்ஸ்மேன்களையும், 4பெளலர்களையும் கொண்டு இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications