தலைமறைவானார் மாஜி மந்திரி முல்லைவேந்தன்
தர்மபுரி:
பதவி நீக்கம் செய்யப்பட்ட தமிழக அமைச்சர் முல்லைவேந்தன், போலீசார் கைது செய்யக்கூடும் என அஞ்சி தலைமறைவாகிவிட்டார்.
தர்மபுரியில் உள்ள அறநிலையத்துறையின் நிலங்களை குத்தகைக்கு விட ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த ஏலத்தில் அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கு சலுகை காட்ட மறுத்த தர்மபுரி அறநிலையத்துறை அதிகாரி அன்புமணியை அமைச்சர் முல்லைவேந்தன்முன்னிலையில் அமைச்சரின் ஆட்கள் கடுமையாக தாக்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரித்த சி.பி.சி.ஐ.டியின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரை பதவி விலக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து பதவி விலகல் கடிதத்தை தனது உதவியாளர் மூலம் முதல்வருக்கு அனுப்பிவிட்டார்.
பதவி விலகிய அமைச்சரையும் வழக்கில் சேர்த்து கைது செய்வது தொடர்பாக சென்னையிலிருந்து வந்துள்ள வக்கீல்களுடன் சி.பி.சி.ஐ.டி போலீசார்ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், கைதாவதில் இருந்து தப்பிக்க முன் ஜாமீன் பெற அவர் திட்டமிட்டுள்ளார்.
அதுவரை போலீசில் சிக்காமல் இருப்பதற்காக தலைமறைவாகிவிட்டார்.
அமைச்சர் பதுங்கியிருக்க வாய்ப்புள்ள தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களை போலீசார் சோதனைநடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறுவதற்கு முன் பே அமைச்சரை கைது செய்ய போலீசார் முயன்று வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் பெற்ற தர்மபுரி நகராட்சி சேர்மன் முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிரகாசம், பென்னாகரம் ஒன்றியசெயலாளர் மாதையன், அமைச்சரின் தனி காரியதரிசி தமிழ்மணி உள்ளிட்டவர்களையும் ஜாமீன் நீட்டிப்பிற்கு முன் கைது செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
முதல்வர் பேட்டி: முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனின் செய்தி ஒளிபரப்புத்துறையை, சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் கூடுதலாககவனித்துக் கொள்வார் என முதல்வர் தெரிவித்துள்ளார்
சென்னையில் தி.மு.க.தலைமையகமான அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்த முதல்வர்,
அமைச்சர் முல்லைவேந்தனின் ராஜினாமா கடிதம் கவர்னருக்கு அனுப்பப்பட்டு கவர்னரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அமைச்சர் மீதானகுற்றச்சாட்டு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேர்தல் நேரத்தில் தனது அமைச்சர் மீதே நடவடிக்கை எடுத்து, அதைச் சொல்லியே அரசு எவ்வளவு நியாயமாக நடந்து கொள்கிறது என்பதைமக்களுக்கு விளக்கி ஓட்டு சேகரிக்க தி.மு.க முயல்வதாக எதிர்க் கட்சியினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications