"மேலும் பல த.மா.கா. எம்.எல்.ஏ.க்கள் விலகுவர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் பல எம்.எல்.ஏக்கள் விலகி திமுக கூட்டணிக்கு வருவர் என்றுசமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகிய ஹாரூண் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியை எதிர்த்து ஹாரூண் 2 தினங்களுக்கு முன்பு த.மா.கா. விலிருந்து விலகினார். இந்த நிலையில்,திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் த.மா.காவிலிருந்து விலகியது நம்பிக்கைத் துரோகம்என்று கூறுகின்றனர்.
ஆனால் அது தவறு. தவறைச் சுட்டிக்காட்டியே நான் விலகினேன். இது தொடர்பாக கட்சித் தலைவர்மூப்பனாருக்கும் முறையாக விளக்கமளித்துக் கடிதம் எழுதியுள்ளேன்.
என்னைப் போல இன்னும் பல எம்.எல்.ஏக்கள், த.மா.கா.விலிருந்து விலகி வருவர்.
அ.தி.மு.க. கூட்டணியைக் கண்டித்துள்ள ப.சிதம்பரம் தி.மு.க கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறேன் என்றார்ஹாரூண்.












Click it and Unblock the Notifications