நாங்களும் அதுதான்: கருணாநிதி
மதுரை:
தேசிய ஜனநாயக கூட்டணியும் கூட மத சார்பற்ற கூட்டணிதான் என தமிழகமுதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தெரிவித்துளார்.
அ.தி.மு.க.தமைையிலான கூட்டணியை மதசார்பற்ற கூட்டணி என்று இடதுசாரிகட்சிகளும், த.மா.கா.வும் வர்ணித்து வருகின்றன. தி.மு.க.தலையிைலானகூட்டணியில் பாஜ.க. இடம் பெற்றுள்ளதால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியைமதவாத கூட்டணி என கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியும் மதசார்பற்ற கூட்டணிதான்.
மதுரையில் நடந்து வரும் கிராம பூசாரிகள் பேரவையின் 4-வது மாநில மாநாடுஉள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கருணாநிதி சென்னையிலிருந்துமதுரை வந்தார்.
அ.தி.மு.க. மதசார்பற்ற கூட்டணி என கூறி சிறுபான்மைை மக்களை ஏமாற்றி வருகிறதுவரவிருக்கும் சட்டசபை தேர்தலில். தி.மு.க. தோழமை கட்சிகளுடனான தொகுதிபங்கீடு குறித்த பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் நடந்து வருகிறது. இது எந்தவிதமான பிரச்சனையுமின்றி முடிவடையும் என நம்புகிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் அ.தி.மு.க.கூட்டணியில் இணைந்ததால் எங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க. தனித்து ஆட்சிஅமைப்பதற்கு தேவையான அளவு தொகுதிகளில் போட்டியிடும்.
ஜெயலலிதா நல்ல ஆட்சியை தருவார் த.மா.கா. தலைவர் மூப்பனார் கூறியிருப்பதுஅவரது சொந்த கருத்து.
அ.தி.மு..க. தலைமையிலான அணியில் பா.ம.க., த.மா.கா. இணைந்திருப்பதால்தமிழகத்தில் வட பகுதியிலும், தென் பகுதியிலும் அந்த கூட்டணிக்கு பலம்அதிகரித்துள்ளது என்பது தவறான கணிப்பு என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications