முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த கோரிக்கை
கோவை:
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த மத்திய நீர் வளத்துறை பரிந்துரைப் படி கேரள அரசு செயல்படவில்லை என்றால், தமிழ்நாட்டிலிருந்து கால்நடைகள்மற்றும் வேளாண்மைப் பொருட்களைக் கொண்டு செல்வதை தடுப்போம் என கொங்குநாடு மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து கொங்குநாடு மக்கள் கட்சியின் தலைவர் தேவராஜன் உடுமலைப் பேட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு செல்வாக்குள்ள கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல், கரூர்,தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 30 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். இந்த தொகுதிகளில் எங்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள்நிறுத்தப்படுவர்.
இது குறித்து புதன் கிழமை தீர்மானிக்கப்படும். புதன்கிழமை காங்கேயத்தில் பேரணி நடத்தவுள்ளோம். இந்த பேரணி, கொங்குவேளாளக் கவுண்டர்கள்பேரவையின் தலைவராக இருந்த அமரர் கோவை செழியனின் சொந்த ஊரான குங்கார்பாளையத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும்.
விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை நீட்டிக்க வேண்டும். இதற்கு எவ்வித கட்டணம் வசூலிக்கக் கூடாது. வேளாண் உற்பத்தி பொருளுக்கு விலைநிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண்மைப் பொருளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யக் கூடாது.
முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த மத்திய நீர் வளத் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையைை ஏற்று செயல்படுத்தப்படவில்லை என்றால்,தமிழகத்தில் இருந்து கேரளாவிற்குச் செல்லும் கால்நடைகள் மற்றும் வேளாண்மைப் பொருட்களை தடுத்து நிறுத்துவோம் என்றார் தேவராஜன்.












Click it and Unblock the Notifications