இந்திய சாப்ட்வேர்துறை பாதிப்பு: ஆகஸ்டில் தான் வழி பிறக்கும்...
பெங்களூர்:
அமெரிக்காவின் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் இந்திய சாப்ட்வேர் துறை கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பின் இந்த நிலை மாறும் என நம்பப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் வரை அமெரிக்காவில் பொருளாதார மந்தம் நிலவும் எனத் தெரிகிறது. அந் நாட்டில் பொருளாதாரவளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் அங்கு சாப்ட்வேருக்கு தேவையும் குறைந்துவிட்டது. இதனால்,இந்தியாவிலிருந்து சாப்ட்வேர் ஏற்றுமதி ஆவதும் குறைந்துவிட்டது.
இது மேலும் குறையலாம். சிறிய அளவில் புராஜெக்ட்களைக் கொண்ட நிறுவனங்கள் பெரிய அளவில்பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அமெரிக்காவில் தேவை குறைந்துபோனதால், இந்தியாவில் சாப்ட்வேர் உற்பத்தி செய்வதும்குறைக்கப்பட்டவிட்டது. இதனால், சாப்ட்வேர் நிபுணர்களின் வேலை வாய்ப்பில் அடி விழுந்துள்ளது. புதியபுராஜெக்டுகள் ஏதும் இல்லாததால் ஆள் எடுப்பதை பல நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டுவிட்டன.
இதனால், ஜாவா உள்பட பலவித கம்ப்யூட்டர் கல்வியை முடித்தவர்களுக்கு புதிதாக வேலை கிடைப்பதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலி பெங்களூரில் அதிக அளவில் உணரப்படுகிறது. இந்தியாவின் சாப்ட்வேர் தலைநகரம் என்றுபெயரெடுத்த பெங்களூரில் தான் மிக அதிக அளவிலான பெரிய, சாப்ட்வேர் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இங்கு அதிக அளவில் சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் தமிழர்களும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும்தான். தமிழக பொறியியல் கல்லூரிகளில் படிப்பு முடித்த உடனேயே பெங்களூருக்கு நம்பிக்கையுடன் கிளம்பிவந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு உடனடியாகவோ, சிறிய போராட்டத்துக்குப் பின்னரோ இங்கு வேலைகிடைத்து வந்தது.
ஆனால், அந்த நிலை இப்போது மெதுவாக மாறி வருகிறது. போட்டி மிகவும் அதிகரித்துவிட்டது.
இந் நிலையில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மாற்றம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
அதே நேரததில் கம்யூனிகேசன்ஸ் சாப்ட்வேர் பிரிவில் தேவை அதிகரித்து வருகிறது. இதனால், இந்தக் கல்வியைபடித்தவர்களுக்கும், இதில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
சிறப்பு ஆலோசனை:
பெங்களூரில் நடைபெற்ற ஆசிய சமுதாய மாநாட்டில், இந்திய சாப்ட்வேர் துறையின் வளர்ச்சியை அமெரிக்காவின்பொருளாதார மாற்றங்கள் பாதிக்குமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் பேசிய வல்லுநர்கள் பலர் அமெரிக்க பொருளாதாரம் இந்திய சாப்ட்வேர் துறையை பெரிய அளவில்பாதிக்காது என்றனர்.
அமெரிக்க பொருளாதார துறையில் வளர்ச்சி குறைந்துள்ள போதும், இந்தியா நிர்ணயித்துள்ள சாப்ட்வேர் ஏற்றுமதிஇலக்கான 6.14 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் என நாஸ்காம் அமைப்புநம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைமை அமைப்பான நாஸ்காம் அடுத்த நிதியாண்டில் இந்தியசாப்ட்வேர் ஏற்றுமதி 9 பில்லியன் டாலர்களை தாண்டும் என எதிர்பார்க்கிறது.
அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்துள்ளதால், இந்திய சாப்ட்வேர் துறை பாதிக்கப்படாமல் இருக்கநியூயார்க், சியாட்டில், சிகாகோ, ஹூஸ்டன் உள்ளிட்ட பல அமெரிக்க நகரங்களில் கண்காட்சி நடத்த நாஸ்காம்திட்டமிட்டு உள்ளது.
நாஸ்காம் மற்றும் பல இந்திய கம்பெனிகள் இணைந்து நடத்த உள்ள இந்த நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் மற்றும் ஜூன்மாதங்களில் நடைபெறும். ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய கண்காட்சி செப்டம்பர் மாதம் நடைபெறஉள்ளதாக நாஸ்காம் அமைப்பின் தலைவர் தேவாங் மேத்தா தெரிவித்தார்.
சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்களின் சாப்ட்வேர் உற்பத்தி குறைவு. இதனால், உலகின் பொருளாதாரத்தில்ஏற்படும் பாதிப்புகள் இந்திய சாப்ட்வேர் சந்தையை பாதிக்காது என்றார்.
பாங்க் ஆப் அமெரிக்காவின், ஆசிய தலைவரான சங்கர் தெரிவிக்கும் போது, 140 பில்லியன் டாலர் சர்வதேசசாப்ட்வேர் மார்க்கெட்டில் இந்தியாவின் பங்களிப்பு 5சதவீதத்திற்கும் குறைவு. இந்திய நிறுவனங்கள் ஒரே வகைசாப்ட்வேர்களை மட்டும் தயாரிப்பதில்லை. எனவே, சர்வதேச மார்க்கெட்டில் ஏற்படும் பாதிப்பு இந்தியநிறுவனங்களை பாதிக்காது என்றார்.
மலேசிய ஒப்பந்தம்: மலேசியாவிற்கான இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதியை அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 600 கோடிரூபாயாக அதிகரிக்க வகை செய்யும் ஒப்பந்தம் ஒன்று பெங்களூரில் கையெழுத்தானது.
இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைப்பான நாஸ்காம் மற்றும் மலேசியாவின் மல்டி மீடியாவளர்ச்சிக்கழகத்திற்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த ஆண்டு 82 கோடி ரூபாயாக இருந்த மலேசியாவிற்கான இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதி இந்த ஆண்டில் 120கோடியாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
அடுத்த 4 ஆண்டுகளில் இதன் அளவை 600 கோடியாக அதிகரிப்பதோடு அதற்கடுத்த 2 ஆண்டுகளில் இந்தஏற்றுமதியை 1400 கோடியாக அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இரு நாடுகளுக்கிடையே தகவல் தொழில் நுட்ப வர்த்தகத்தை வளர்க்க வகை செய்யும் இந்த ஒப்பந்தத்தின் மூலம்,இந்திய நாஸ்காம் அமைப்பு மலேசியாவின் சூப்பர் காரிடாரில் தனது கிளை ஒன்றை துவக்கஅனுமதிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வந்துள்ள மலேசிய எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சர் லியோ மோகியின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications