த.மா.கா.வை அர்த்தமற்றதாக்கிய மூப்பனார்: வைகோ

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்ததன் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்ததன் நோக்கத்தைஅர்த்தமற்றதாக்கி விட்டார் மூப்பனார் என வைகோ விமர்சித்துள்ளார்.

பாண்டிச்சேரியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ,

1996ம் ஆண்டு தமிழக பொதுத் தேர்தலில், ஊழல் மிக்க அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க அப்போதைய பிரதமர்நரசிம்ம ராவ் முடிவு செய்தார்.

அதனை எதிர்த்து தமிழக காங்கிரஸில் இருந்த தன்மானம் மிக்க தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி தமிழ்மாநில காங்கிரஸை ஆரம்பித்தனர்.

தற்போது அதே அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது த.மா.கா.வை ஆரம்பித்த நோக்கத்தைசிதைப்பதாக உள்ளது.

மேலும், பாண்டிச்சேரியை தவிர்த்து தமிழகத்தில் மட்டுமே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளதால் வரும்தேர்தலில் இக்கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை என்றார் வைகோ.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+