அரசு மருத்துவர்களுக்கு சலுகை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

அரசு மருத்துவர்கள் தனியாக தொழில் நடத்துவதற்கு(பிரைவேட் பிராக்டீஸ்) தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக சுகாதாரம் மற்றும்மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

நாகர்கோவில் அருகே ஞாயிறன்று அரசு மருத்துவக்கல்லூரி ஒன்றிற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய அமைச்சர் தெரிவித்த தகவல்கள்:

நவீன வசதிகளுடன் 100 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வரும் ஜூன் மாதம் முதல் செயல்பட துவங்கும்.

அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் தங்களது வேலை நேரம் முடிந்ததும் தனியாக மருத்துவ தொழில் செய்ய அனுமதிஅளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வரும் கோடையில் மின்தடை இருக்காது. தொழிற்சாலைகளுக்கான மின்விநியோகம் மேலும் 2 மணிநேரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செம்பகராமன்புதூரில் ரப்பர் பூங்கா அமைக்க மத்திய அரசு 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு முன் இத்திட்டத்திற்கானஅடிக்கல் நாட்டப்படும் என தெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+