கருணாநிதியே மீண்டும் முதல்வர்: தமாகா எம்.எல்.ஏ
திண்டுக்கல்:
வரும் சட்டசபைத் தேர்தலில் தி. மு.க வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக கருணாநிதி ஆட்சியைத் தொடர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்உறுப்பினரும், நிலக்கோட்டைத் தொகுதி எம்.எல்.ஏ வுமான பொன்னம்மாள் பேசினார்.
தமிழ் மாநில காங்கிரஸ், அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தபிறகு "தலையில் இருந்து வால் வரை இப்போது எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியுள்ளது.ப.சிதம்பரம், ஹாரூன், பொன்னம்மாள் என தொடர்ந்து அடிமட்டத் தொண்டர்கள் கூட இப்போது அதிருப்தியில் இறங்கியுள்ளனர்.
இதனை நிரூபிக்கும் வகையில், வத்தலக்குண்டு அருகே உள்ள ஆடுபட்டியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸின் நிலக் கோட்டைஎம்.எல்.ஏ.வான பொன்னம்மாள் பேசியதாவது:
கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நிலக்கோட்டைத் தொகுதிக்கு நிறைய நன்மைகள் கிடைத்துள்ளது. அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன.இங்கே ஒரு கல்லூரியைக் கட்டவும் அனுமதி கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட தி. மு.க தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியை பாராட்டாமல்இருக்க முடியாது.
மக்களின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது ஆதரவுஅவருக்குத்தான். இந்த ஆட்சியில் தான் தமிழகம் முழுவதிலும் அதிகமான இடங்கள் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதிக பாலங்கள்அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
இவ்வாறு பேசியதன் மூலம் தமிழ் மாநில காங்கிரஸ்சில் அதிருப்தி கோஷ்டி உருவாகியிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications