சீட் பிடிக்க காங்கிரசில் கடும் போட்டி
சென்னை:
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 15 சீட்டுக்களில் போட்டியிடுவதற்கு கடும்போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 15இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சீட்டுக்களைக் கைப்பற்ற இப்போது கட்சிக்குள்கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் இருப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால்இம்மியூண்டு அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சீட்டுகளுக்குப் போட்டியிடவிரும்புவோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மயக்கம்தான் வரும்.
காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஏற்கனவே டெல்லி சென்று விட்டார்.போகும்போது தனது ஆதரவாளர்கள் 10 பேரின் பட்டியலையும் எடுத்துச்சென்றுள்ளதாகத் தெரிகிறது. அவர்களுக்குக் கண்டிப்பாக சீட் கொடுக்க வேண்டும்என்று கட்சித் தலைவர் சோனியாவை அவர் வற்புறுத்தவுள்ளார்.
இளங்கோவன் போய் விட்டால் தங்கபாலு சும்மா விடுவாரா? அவரும் 20 பேர்அடங்கிய பட்டியலை தயாராக வைத்துள்ளாாராம். அவர்களில் 10 பேருக்காவது சீட்கொடுக்க வேண்டும் என்று அவர் கோரவிருக்கிறார்.
இவர்கள் தவிர அன்பரசு, எம்.பி.சுப்ரமணியம், மரகதம் சந்திரசேகர், பிரபு என பெரும்பட்டாளமே பட்டியலுடன் காத்திருக்கிறது. ஒவ்வொருவரும் 10 பேர் என்று வைத்துக்கொண்டால் கூட, தலைவர்கள் மூலம் மட்டுமே 100-க்கணக்கில் வேட்பாளர்கள்தேறுவார்கள் எனத் தெரிகிறது
வழக்கம் போல ஏதாவது ஒரு கோஷ்டியின் கைதான் வேட்பாளர் விவகாரத்திலும்ஓங்கும். அப்போது பிற கோஷ்டிகள் பிரசாரத்தில் ஈடுபடாமல் காலை வாறும்.இதுதான் வழக்கமாக காங்கிரசில் ந டக்கும். இப்போது என்ன நடக்கப் போகிறதோ,பொறுத்திருந்து பார்ப்போம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications