பெண் வயிற்றில் 3.5 கிலோ முடி
கோவை:
கோவையில் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்த 3.5 கிலோ முடியை அரசு மருத்துவமனை டாக்டர்கள்ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.
கோவை மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா (30). இவருக்குத் திருமணமாகிகுழந்தைகள் உள்ளனர். சில நாட்களாக மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்த சந்திரா சரிவரப் பசிக்காமலும், சரிவரசாப்பிடாமலும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஸ்கேன், மற்றும் பல்வேறுசோதனைகள் செய்து அவரது வயிற்றில் முடி இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் இதனை ஆபரேஷன் மூலம்அகற்ற தீர்மானித்தனர்.
டாக்டர் விஜயலட்சுமியின் தலைமையில் டாக்டர்கள் திருமலைச் சாமி, சஞ்சாய் ராம்குமார், சந்திரசேகர் ஆகியோர்அடங்கிய டாக்டர்கள் குழு இந்த ஆபரேஷனை நடத்தியது.
இறுதியில் இரைப்பையிலிருந்து 3.5 மூன்றரை கிலோ எடையுள்ள முடியை அகற்றினர். இப்போது சந்திரா நலமாகஉள்ளார்.
இந்த ஆபரேஷனை மேற்கொண்ட டாக்டர் விஜயலட்சுமி கூறியதாவது:
சந்திராவிற்கு அடிக்கடி லேசான வயிற்று வலி இருந்துள்ளது. பசியின்றி சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார்.
சாதாரணமாக மன நோயாளியாக உள்ள பெண்கள் முடியை வாயில் வைத்து மெல்லும் பழக்கத்திற்குஆளாகின்றனர். இந்த வகையில் அவர் முடியை தாமே கடித்து சாப்பிடும் பழக்கத்திற்கு உட்பட்டிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக அவர் இந்த முடியை சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வயிற்றில் 3.5மூன்றரை கிலோ முடி சேர்ந்து, கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த முடியை வெற்றிகரமாக ஆபரேஷனில் அகற்றியுள்ளோம். கோவை அரசு மருத்துவமனையில் இத்தகையஆபரேஷன் முதல் முறையாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications