ஊழல் குற்றச்சாட்டு: கலக்கத்தில் பா.ஜ.க.
டெல்லி:
தெகல்கா டாட் காம் நிறுவனத்தால் பாரதியா ஜனதா மற்றும் சமதா கட்சி தலைவர்கள் மீது லஞ்சம் வாங்கியதாககுற்றம் சாட்டப்பட்டிருப்பது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.
தெகல்கா டாட்காம் நிறுவனம் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பங்காரு லட்சுமணனன், தேசிய ஜனநாயககூட்டணியில் அங்கம் வகிக்கும் சமதா கட்சி தலைவர் ஆகியோர் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்டவிவகாரங்களில் லஞ்சம் வாங்கியதாக வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது.
பங்காரு லட்சுமணன் கட்சியின் வளர்ச்சிக்காகத்தான் பணம் பெற்றேன் எனவும் சொந்த நலத்துக்காக பணம்பெறவில்லை எனவும் கூறியிருந்தார். அவர் தனது பா.ஜ.க. தலைவர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டார்.
சமதா கட்சி தலைவர் ஜெயா ஜெட்லியும் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சமதா கட்சியும் மத்தியஅமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் சமதா கட்சியைசேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றச்சாட்டுகள் பா.ஜ.க வினரை கலக்கியிருக்கிறது. பா.ஜ.க.அரசு மீது இது போன்ற கடுமையானகுற்றச்சாட்டுகள் கூறப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களிலும் பாண்டிச்சேரியிலும் ஏப்ரல் மாதம் தேர்தல்நடக்கவிருக்கும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் தேர்தல் வெற்றிகளை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்தகுற்றச்சாட்டு மத்தியில் ஆளும் தே.ஜ. கூட்டணிக்கும் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.
பா.ஜ.கட்சியின் தலைவரான பங்காரு லட்சுமணன் பிரதமர் வாஜ்பாயால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தான்பா.ஜ.க.வின் முதல் தலித் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பங்காரு லட்சுமண் மீது குற்றம் சுமத்தப்பட்டதும் அவரை பா.ஜ.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லிகட்சி வட்டாரத்தினரால் வற்புறுத்தப்பட்டார்.
பதவியை ராஜினாமா செய்த பங்காரு லட்சுமணன், அரசியல் சூழ்ச்சிக்கு நான் பலியாகி விட்டேன். கட்சிவளர்ச்சிக்காகத்தான் நான் பணம் வங்கினேன். எந்த விதமான ஆயுத பேர ஊழிலிலும் நான் ஈடுபடவில்லை எனகூறினார்.
பா.ஜ.க தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சிக்கோ அல்லது ஆட்சிக்குகோ எந்த விதமானபாதிப்பும் ஏற்பட் டு விடாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என கூறினர்.
பாரதிய ஜனதா கட்சிக்கான முதல் அச்சுறுத்தல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சதலைவரும் ரயில்வே துறைஅமைச்சருமான மம்தா பானர்ஜியிடமிருந்து வந்துள்ளது.
அவர் பா.ஜ.க வால் கூட்டப்பட்ட அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்தார். மேலும் தனது கட்சி சட்ட ஆலோசனைகுழுவுடன் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் எந்த மாதிரியான நிலைப்பாடை எடுப்பது என்பது குறித்தும்செவ்வாய்க்கிழமை இரவு மம்தா ஆலோசனை நடத்தினார்.
மம்தா பானர்ஜியின், திரினாமுல் காங்கிரசின் முக்கிய எதிர்க்கட்சி இந்திய மார்கசிஸ்ட் கட்சியாகும். இந்தியமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த விஷயத்தை பெரிது படுத்தி மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரச்சாரத்தில்ஈடுபடும். தெகல்கா டாட் காமால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தே.ஜ கூட்டணியை பெரிதும் பாதிக்கும் எனதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
பா.ஜ.க வும் நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்தே இருக்கிறது. இது குறித்து பாரதிய ஜனதா கட்சி அதிகாரிஒருவர் கூறுகையில். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து வரவிருக்கும் சட்டசபைதேர்தலில் போட்டியிட உள்ளோம்.
அ.தி.மு.க.வின் ஊழலையே எங்கள் ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்தோம். இப்போதுள்ள சூழ்நிலையில்அது போன்ற பிரச்சாரம் எங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்புதான் அதிகம் உள்ளது என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications