தொட்டுத் தொடரும் ஆயுத பேர ஊழல்
டெல்லி:
மீண்டும் மீண்டும் தாக்கும் பூகம்பம் போல் இந்தியாவின் பாதுகாப்புத்துறையை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளது ஆயுத பேர ஊழல்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியை இழக்க காரணமான போபோர்ஸ் பேர ஊழலுக்கு அடுத்த மிகப்பெரிய ஊழல்தற்போது நடைபெற்றுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு தேவையான ஆயதங்களை ரஷ்யா மட்டும் விநியோகம் செய்த போது வராத ஊழல் பிரச்சனை மற்றநாடுகளிடம் ஆயுதங்களை வாங்க முற்பட்டபோது வெளிப்பட்டது.
சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெறும் வழக்கத்தை இந்திராகாந்தி ஆரம்பித்து வைக்க அதனை ராஜீவ்காந்தி தொடர்ந்தார். இதில் சுவிஸ் நாட்டின் போபோர்ஸ் பீரங்கிகளை வாங்கியதற்கு லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பின்னர், அது ராஜீவ் காந்தி அரசை கவிழ்த்ததோடு இன்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிரான ஆயுதமாகபா.ஜ.க.வால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின், சுகோய் ரக விமானங்கள் மற்றும் ரஷியாவின் டி-90 வகை டாங்குகள் வாங்கியதில் ஊழல்நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து 1985ம் ஆண்டிற்குப்பின் முடிவு செய்யப்பட்ட ஆயுத பேரங்கள் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்ணாண்டஸ் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டார்.
இந்த விசாரணை நடந்து கொண்டிருப்பதால் பாதுகாப்புத்துறைக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவது குறித்துமுடிவெடுக்க அதிகாரிகள் தயங்கி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆயுதங்கள் வாங்க புதிய ஒப்பந்தம் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை.
தற்போதைய வாஜ்பாய் ஆட்சியில் தான் கார்கில் போர் மற்றும் காஷ்மீர் தீவிரவாதிகள் தொல்லை போன்ற காரணங்களால்ராணுவத்தை நவீனபடுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய் கிழமையன்று வெளியிடப்பட்ட ஆயுத பேர ஊழல் தொடர்பான தகவல்களை தொடர்ந்து இந்திய ராணுவத்தைநவீனப்படுத்தும் முயற்சி பாதிக்கப்படக் கூடும்.
இது போன்ற ஊழல்கள் மீடியாக்காரர்கள் மூலம் வெளி வருகின்றன. போபோர்ஸ் ஊழலை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைவெளியிட்டு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போதைய ஊழலை தனியார் வெப்சைட் நிறுவனம் தெஹல்கா டாட்காம் வெளிப்படுத்தியுள்ளது. இதே தெகல்காம் இன்டர்நெட் நிறுவனம்தான் சமீபத்தில் மேட்ச் பிக்ஸிங் ஊழலை அம்பலமாக்கியதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications