தேர்தலில் நிற்க வாய்ப்பு கேட்கிறது ஐக்கிய ஜ.தளம்
கோவை:
கடந்த தேர்தலில் இதயத்தில் இடம் கொடுத்த முதல்வர் கருணாநிதி, இந்த முறை எங்களுக்கு போட்டியிட இடம்தர வேண்டும் என கோவையில் ஐக்கிய ஜனதா தளத்தின் அகில இந்தியப் பொதுச் செயலர் கே. ரகுபதிதெரிவித்தார்.
கோவையில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், நிருபர்களுக்கு ரகுபதி அளித்தபேட்டியில் கூறியதாவது:
சென்ற தேர்தலில் நாங்கள் இடம் கேட்டபோது, தமிழக முதல்வர் கருணாநிதி, இதயத்தில் இடம் இருக்கிறது எனக்கூறினார். இந்த முறை, அந்த இதயத்தை திறந்து பாருங்கள், எங்களுக்கும் போட்டியிட வாய்ப்புத் தாருங்கள்எனக் கோரியுள்ளோம்.
தி.மு.க., வுடன் தொகுதி உடன்பாடு குறித்து தொடர்ந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த தேர்தலில்கூட்டணியில் இடம் கிடைத்தால் போட்டியிடுவோம். அப்படி இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவதுகுறித்து முடிவு செய்யவுள்ளோம். இது குறித்து அகில இந்திய நிர்வாகக் குழு விவாதிக்கும்.
இந்த நிர்வாகக் குழுக் கூட்டம் வரும் மார்ச் மாதம் 23ம் தேதி நடக்கவுள்ளது. அதற்குள் கூட்டணி, தொகுதிப்பங்கீட்டுப் பிரச்சனை முடிந்து விடாது என நினைக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பேச்சுவார்த்தைக்குஎங்களை அழைக்காவிட்டாலும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் விடமாட்டார்கள்.
எங்கள் பலம் என்ன என்பதை நாங்கள் அறிவோம். இதில் கூடுதலாகவோ, குறைத்தோ கூறாமல் உண்மையைஒப்புக் கொள்கிறோம். எங்களுக்கு தமிழகத்தில் 30 இடங்களில் பலம் உள்ளது. இதில் 6 தொகுதிகளில் வெற்றிவாய்ப்புள்ளதாக கருதுகிறோம்.
கடந்த 71ம் ஆண்டு முதல் நான் தமிழகத் தேர்தலை கவனித்து வந்துள்ளேன். இதில், மாநிலக் கட்சிகள் துணைஇல்லாமல் தேசியக் கட்சிகள் வெற்றி பெற்றதில்லை என்பதை உணர்ந்துள்ளோம்.
அ.தி.மு.க., வுடன் எந்த அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டது என்பதுதெரியவில்லை. விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்றுள்ள கூட்டணியில்,காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது வியப்பை அளிக்கிறது என்றார் ரகுபதி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications