சாதனைகளை முறியடித்த லஷ்மண்
கோல்கத்தா:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் இரட்டை சதமடித்த ஹைதராபாத் வீரரான வி.வி.எஸ்.லஷ்மண்.
கோல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டியில்இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார் லஷ்மண்.
ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களின் பந்தை சாதனைகள் பல புரிய கருவியாக பயன்படுத்திக்கொண்டார் லஷ்மண்.
1958-59 சீரிஸில் இதே ஈடன் மைதானத்தில் ரோகன் கன்னாய் என்ற வீரர் எடுத்த 256 ரன்களே இதுவரை இந்திய மண்ணில் எடுக்கப்பட்டஅதிகபட்ச ரன்களாக இருந்தது.
இதனை முறியடித்த லஷ்மண் ஆஸிக்கு எதிரான இப்போட்டியில் 275 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த 5வதுவீரராகவும் லஷ்மண் திகழ்கிறார்.
இந்திய வீரர் ஒருவர் டெஸ்ட் மேட்சில் எடுத்த அதிகபட்ச ரன்கள் சுனில் மனோகர் கவாஸ்கரின் 236ரன்களே. கடந்த 18 ஆண்டுகளாக இருந்த அந்தசாதனையையும் முறியடித்தார் லஷ்மண்
கிரிக்கெட் ஜாம்பவான் சர்.டொனால்ட் பிராட்மன் ஒரே இன்னிங்ஸில் 44 பவுண்டரிகள் அடித்ததையும் சமன் செய்தார் லஷ்மண். தொடர்ந்து ஆடவுள்ளலஷ்மண் இன்னும் 9 பவுண்டரிகள் அடித்தால் ஒரே இன்னிங்ஸில் அதிகபட்ச பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
லஷ்மணின் சாதனை பற்றி கேள்விப்பட்ட அவரது தந்தை இச்செய்தி தனக்கு பெருமை அளிப்பதாக கூறினார்.
லஷ்மணின் சாதனையை பாராட்டிய மேற்குவங்காள விளையாட்டுத்துறை அமைச்சர் சுபாஷ் சக்ரபர்த்தி, மே.வங்க அரசு, லஷ்மணுக்கு ஒரு லட்ச ரூபாயைபரிசாக அளிக்கும் என்றார்.
ஹர்பஜன்சிங் டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்ததற்காகவும் மே.வங்க அரசு அவருக்கு ஒரு லட்ச ரூபாயை பரிசாகஅளிக்கும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications