கிரிக்கெட்:ஆஸி.யின் தொடர் வெற்றியை தடுத்த லஷ்மண்
கோல்கத்தா:
ஆஸ்திரேலியாவின் தொடர் டெஸ்ட் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இந்தியாவின் வி.வி.எஸ்.லஷ்மண்.
கோல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 445 ரன்களுக்கு பதில் அளிக்க வேண்டிய இந்திய அணி 171 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை இழந்துபாலோ-ஆன் பெற்றது.
இன்னிங்ஸ் தோல்வி அடையக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தனது 2வது இன்னிங்ஸை ஆடியது இந்தியா.
மூன்றாம் நாள் ஆட்டத்தின் இறுதியில் வி.வி.எஸ்.லஷ்மண், ராகுல் திராவிட்டின் பொறுப்பான ஆட்டத்தால் (பொறுமையான ஆட்டமும் கூட) 4விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை எடுத்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய லஷ்மண்-திராவிட் ஜோடியை பிரிக்க ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும்முடியவில்லை.
ஆஸ்திரேலிய பந்து வீச்சை சமாளித்த லஷ்மண் 275 ரன்கள் எடுத்தார். டிராவிட்டும் தன் பங்கிற்கு தனது 7 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
5வது விக்கெட்டிற்கு இதுவரை இந்த ஜோடி சாதனை அளவாக 357 ரன்கள் சேகரித்துள்ளதுஆட்ட நேர இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின்ஸ்கோரை 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 589 ரன்கள் என்ற நிலைக்கு இந்த ஜோடி இட்டுச் சென்றது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications