வாஜ்பாய் அரசு பதவி விலக முலாயம் கோரிக்கை
டெல்லி:
ஆயுத பேர ஊழலுக்குப் பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவரை கோரியுள்ளார் முன்னாள் பாதுகாப்புத்துறைஅமைச்சர் முலாயம் சிங் யாதவ்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான முலாயம் சிங் யாதவ் கூறுகையில்,
பா.ஜ.க. தலைவர் பங்காரு லஷ்மண் சம்பந்தப்பட்டுள்ள இந்த ஆயுத பேர ஊழலுக்கு பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்.
போபோர்ஸ் ஊழலுக்கு அடுத்து நாட்டின் பாதுகாப்புத்துறையில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழலாகும் இது. இத்தகைய ஊழலில் ஆளுங்கட்சி மிகக் கேவலமாக ஒருலட்ச ரூபாய்க்கு நாட்டின் பாதுகாப்பை விற்றுள்ளது என குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, சந்தோஷ் மோகன்தேவ் கூறும் போது, இந்த ஊழலில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும். இந்த ஊழலுக்குபொறுப்பேற்று பிரதமர் வாஜ்பாய் பதவி விலக வேண்டும். இந்த கோரிக்கையை அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தும்.
தே.ஜ. கூட்டணி கட்சிகளின் கருத்து:
குற்றச்சாட்டு தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் நிதிஷ் சென் குப்தா கருத்து தெரிவித்தார்.
ஆயுத பேர ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிட்ட தனியார் நிறுவனத்தை விசாரிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சார்பில் இத்தகைய செயல்களில்அந்த நிறுவனம் ஈடுபட்டதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனக் கோரினார் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நவல் கிஷோர் ராய்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications