அமெரிக்கா சென்றார் இந்தியாவின் புதிய தூதர்
வாஷிங்டன்:
அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட லலித் மான்சிங் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள புதன்கிழமை அமெரிக்கா வந்து சேர்ந்தார்.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் நரேஷ் சந்திராவிற்கு பதில் நியமிக்கப்பட்டுள்ள லலித் மான்சிங் முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளராகஇருந்தார். 1989 ல் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றியவர் லலித் மான்சிங்.
இதனிடையே, அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள ஜூனியர் புஷ் நிர்வாகம், ஆசிய விவகாரங்களை கவனிப்பதற்கான துணை அமைச்சரை இன்னும்நியமிக்கவில்லை.
கிளின்டன் ஆட்சியில் இப்பொறுப்பிலிருந்த கார்ல் இன்டர்பிரத் 2 மாதங்களுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நியமனமும் முடிவு செய்யப்படவில்லை. எனவே, கிளின்டனால் நியமிக்கப்பட்ட ரிச்சர்ட் செலஸ்ஸியையே தொடர்ந்துஅப்பதவியில் நீடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது புஷ் நிர்வாகம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications