பாஜக வின் தற்காலிக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் ஆயுதப் பேர ஊழல் வழக்கில் தொடர்புடையது சம்பந்தமாகராஜினாமா செய்ததையடுத்து கட்சியின் துணைத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி தற்காலிகத் தலைவராகநியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் பாஜக பொதுச் செயலாளர் நரேந்திர மோதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
பாஜக தலைவர் பங்காரு லட்சுமண் மேல் ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் ராஜினாமாசெய்துள்ளார்.
இந்த நிலையில் ஊழல் வழக்கு குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள்.
தற்போது கட்சியின் தற்காலிகத் தலைவராக ஜனா கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு நரேந்திர மோதி தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications