கண்ணப்பன் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Kannappan,Karunanidhi,Seats sharing constituency,assembly, election முன்னாள் அமைச்சர் கண்ணப்பனின் கட்சியான மக்கள் தமிழ் தேசம் கட்சிக்கு திமுககூட்டணியில் 6 சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் தமிழ் தேசம் கட்சி சமீபத்தில் திமுக கூட்டணியில் இணைந்தது. தொகுதிப்பங்கீடு தொடர்பாக இக்கட்சியின் பிரதிநிதிகள் குழு, திமுக குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில், இந்தக் கட்சிக்கு உரிய சீட்டுக்கள் குறித்து திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வியாழக்கிழமை சென்னையில் அறிவித்தார்.

தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக தனது கட்சிப்பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்களுடன் கண்ணப்பன் வியாழக்கிழமை காலை திமுகதலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அங்கு முதல்வர்கருணாநிதியுடன் பேசினார். பிறகு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில், முதல்வர் கருணாநிதியும், கண்ணப்பனும் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தில் கை யெழுத்திட்ட பிறகு அங்கு கூடியிருந்த கட்சித் தொண்டர்களி டையே கண்ணப்பன் பேசு கையில், எங்களுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கிய தல்வர்கருணாநிதிக்கு நன்றி. இந்த 6 தொகுதிகளில் மட்டும் வெற்றிக்காக பாடுபடாமல்,திமுக கூட்டணி போட்டியிடும் 234 தொகுதிகளிலும் வெற்றிக் கனியைப் பறிக்கமக்கள் தமிழ் தேசம் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார்.

பின்னர் கருணாநிதி பேசுகையில், கண்ணப்பனை, எனக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான்அறிமுகம். ஆனால் சென்னை மேயருக்கோ ( ஸ்டாலின்) அதற்கு முன்பே தெரியும்.யசோதை வீட்டிலிருந்து தேவகி வீட்டுக்கு இந்த கிருஷ்ணன் வந்துள்ளார். ஆனால்கிருஷ்ணனுக்கு உரிய மரியாதை எப்போதுமே உண்டு என்றார்.

கண்ணப்பன் தவிர மேலும் சில கட்சிகளுக்கும் திமுக கூட்டணியில், வியாழக்கிழமையே தொகுதிப் பங்கீடு முடிந்தது. இதன்படி, சமீபத்தில் த.மா.காவிலிருந்து தப்பிவந்த ஜே.எம்.ஹாரூனின் ஐக்கிய ஜமாத் அமைப்புக்கு 2 சீட்டுக்களும், முத்தரையர்சங்கத்திற்கு 1 இடம், குமரி அனந்தனின் தொண்டர் காங்கிரஸுக்கு 1 இடம், உழவர் உழைப்பாளர் கட்சிக்கு ஒரு இடம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தக் கட்சிகள் தவிர தற் போது மதிமுக, எம்.ஜி.ஆர். கழகம், எம்.ஜி.ஆர்.அதிமுக,வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இன்னும்தொகுதிப் பங்கீடு முடியவில் லை. இந்தக் கட்சிகளின் த லைவர்களுடன் கருணாநிதிஇறுதிக் கட்ட ஆலோசனை நடத்திய பிறகு தொகுதிகள் அறிவிக்கப்படும் என்றுதெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+