மதுரையில் வாஜ்பாய் கொடும்பாவி எரிக்க முயற்சி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் வாஜ்பாய் உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள்கைது செய்யப்ட்டனர்.
தெஹல்கா டாட் காம் நிறுவனம் பல அரசியல் தலைவர்களும் ஆயுத பேர ஊழலில்ஈடுபட்டிருப்பதாக வீடியோ பட ஆதாரங்களுடன் வெளியிட்டது.
இதற்கு பொறுப்பேற்று பிரதமர் வாஜ்பாய் பதவி விலக வேண்டும் என கோரிமதுரையில் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள், வாஜ்பாயுக்கு எதிராககோஷங்கள் எழுப்பியபடி, மதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு அருகேவாஜ்பாயின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். வாஜ்பாயின் உருவபொம்மையையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டகாங்கிரஸ் தொண்டர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications