மீனவர் பலி .. திமுக சார்பில் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை வீரர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் போராட்டம்நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை நகர மேயருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக மீனவர்களை அடிக்கடி சுட்டுக் கொல்வது இலங்கை கடற்படையின் வாடிக்கையாகி விட்டது. தொடர்கதையாக இது நடந்து வருகிறது.

நாகப்பட்டனம் மீனவர் கோபி என்பவர் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை வீரர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகியுள்ளார்.இதற்கு திமுக இளைஞரணி கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

தமிழக மீனவர்களைச் சுடுவதை நிறுத்த வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகளை புறக்கணித்து தொடர்ந்து இதுபோன்ற செயலில்ஈடுபட்டு வரும் இலங்கை அரசைக் கண்டித்து அந்நாட்டு தூதரகத்தின் முன்பு 20-ம் தேதி காலை 10 மணிக்கு அமைதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுசெய்துள்ளோம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் கோபி குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+