கட்சிக்கு சின்னம் பெற டெல்லி விரைந்தார் சிதம்பரம்
சென்னை:
த.மா.கா. ஜனநாயக பேரவைத் தலைவர் சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றுள்ளார். இவர் தேர்தல் ஆணையத்தில் தம் புதிய கட்சியை பதிவுசெய்வதற்கும், கட்சிக்கு சின்னம் பெறவும் டெல்லி சென்றுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ், அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பதை த.மா.கா கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்ருமான ப. சிதம்பரம் ஆரம்பம்முதலே எதிர்த்து வந்தார்.
மூப்பனார் அ.தி.மு.கவுடன் தேர்தல் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதும் சிதம்பரம் த.மா.கவிலிருந்து பிரிந்து த.மா.கா. ஜனநாயக பேரவை என்ற புதியஅமைப்பை துவக்கினார்.
சிதம்பரம் தேர்தலில் தி.மு.க. அணியில் இணைந்து போட்டியிடவிருக்கிறார். தமிழக முதல்வரும். தி.மு.க. தலைவருமான கருணாநிதியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார். ஆனால் சிதம்பரத்துக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது முடிவாகவில்லை. 5 தொகுதிகள் ஒதுக்கப்படலாம்என கூறப்படுகிறது.
இந்நிலையில் சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி சென்றுள்ளார். தேர்தல் ஆணையத்தில் தமது கட்சியின் பெயரை பதிவு செய்யவும், தனதுகட்சிக்கான தேர்தல் சின்னம் பெறுவதற்காகவும் அவர் டெல்லி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications