இன்னும் முடியவில்லை அடையாள அட்டை வழங்கும் பணி
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர்கள் அடையாள அட்டை வழங்கும் பணி முடிவு அடையவில்லை.
வரும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க அடையாள அட்டை அவசியம் என்ற தேர்தல் ஆணையத்தின்உத்தரவு மாற்றப்படலாம்.
கடந்த 97ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான்குஆண்டுகள் முடிந்த பின்னும் அடையாள அட்டைகள் வழங்கும் பணி முடியவில்லை.
புகைப்படம் எடுக்கப்பட்ட வாக்காளர்கள் பலருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால்,அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வாக்காளர்கள் பலரின் அடையாள அட்டையில்புகைப்படம் மாறி இருப்பதால் திருப்பி அளித்து விட்டனர்.
அடையாள அட்டை பெறாத வி.ஐ.பி.லிஸ்டில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனும், தமிழகஅமைச்சர் ஆற்காடு வீராசாமியும் அடக்கம். அமைச்சரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. சேஷனுக்கு 2முறை புகைப்படம் எடுத்தும் அடையாள அட்டை தரப்படவில்லை.
கருத்தரங்கு ஒன்றில் பேசிய சேஷன் அனைவருக்கும் அடையாள அட்டை அளித்த பின்பே வாக்கு அளிக்கஅடையாள அட்டையை கட்டாயப்படுத்த வேண்டும் என்றார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி, அடையாள அட்டைவழங்கும் பணி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் அடையாள அட்டைகளை வீடுவீடாக சென்று அளித்து விட்டதாக கூறி உள்ளனர்.
அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றார்.
மார்ச் 25ம் தேதிக்குள் அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு உள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications