வாஜ்பாய்க்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு வாபஸ்
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளராக ஜார்ஜ் பெர்னான்டஸ் தொடர்ந்து நீடிப்பதற்கு எதிர்ப்புதெரிவித்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரான ஹெக்டே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டி:
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் ஆயுதப் பேர ஊழல் குற்றச்சாட்டால் தனது பதவியைராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளராக அவர் நீடிப்பார் என்று கூறுவது தவறு.குற்றம்சாட்டப்பட்டவர் கூட்டணியின் அமைப்பாளராக இருக்கக் கூடாது. இதைக் கண்டித்து ஐக்கிய ஜனதா தளம்தேசிய ஜனநாயகக் கூட்டியிலிருந்து விலகுகிறது என்றார்.
ஏற்கனவே ஆயுதப் பேர ஊழல் தொடர்பாக ஜார்ஜ் பெர்னான்டஸ் ராஜினாமா செய்துள்ளார். திரினாமுல் காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த மம்தா பானர்ஜி மற்றும் அஜித் குமார் பாஞ்சா ஆகியோரும் ராஜினாமா செய்து விட்டனர்.
இவர்கள் தவிர நிதிஷ்குமார், சீனவாச பிரசாத், திக் விஜய் சிங் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 6 எம்.பி.க்களின் பலம் குறைந்து விட்டது.
மேலும் ஐக்கிய ஜனதா தளமும் இப்போது தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளதால்வாஜ்பாய் அரசுக்கு மேலும் 6 எம்.பி.க்களின் ஆதரவு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications