அ.தி.மு.க.வுக்கு இரு அமைப்புகள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுகவுக்கு மேலும் 2 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம் என்ற சமீபத்தில் துவக்கப்பட்ட ஒரு கட்சி மற்றும் கொங்கு வேளாள கவுண்டர்கள்சங்கம் ஆகியவை அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன.
திராவிட விழிப்புணர்ச்சிக் கழக தலைவர் பி.டி.குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுவைஆதரிக்க முடிவு செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து தொகுதிகள் ஒதுக்கி அழைப்பு வரும் என்றுஎதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால், திருமயம் தொகுதியில் நான் தனியாக போட்டியிடுவேன் என்றார் அவர்.
இதேபோல, கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத் தலைவர் ஆறுச்சாமி அளித்த மற்றொரு பேட்டியில்,ஜெயலலிதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம். வரும் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறமுழுமூச்சுடன் எங்களது சங்கம் உழைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications