திமுக கூட்டணியில் புதிய தமிழகத்திற்கு 10 தொகுதிகள்
சென்னை:
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியும், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் திங்கள்கிழமை மாலை சந்தித்துஇதுதொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மாலையில் அறிவாலயம் வந்த டாக்டர் கிருஷ்ணசாமியும், கருணாநிதியும் இறுதியாக பேச்சுவார்த்தைநடத்தினார்கள். பின்னர் புதிய தமிழகத்திற்கு 10 தொகுதிகள் ஒதுக்குவதாக முடிவானது.
ஒப்பந்தத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், புதிய தமிழகத்திற்கு 10 தொகுதிகள்கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது கட்சிச் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்றார்.
கிருஷ்ணசாமி பேசுகையில், 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சியே. இரு தரப்பிலும் தகவல் பரிமாற்றத்தில்ஏற்பட்ட குழப்பமே தாமதத்திற்குக் காரணம் என்றார்.
வட மாவட்டங்களிலும் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, நான் தமிழ்நாட்டுக்குள்தான் தொகுதிகள் தேவைஎன்று கருணாநிதியிடம் கேட்டிருக்கிறேன் என்றார் சிரித்துக் கொண்டே.












Click it and Unblock the Notifications