சென்னையில் முதல்வர் மகன்கள் சைக்கிள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் சட்டசபைத் தொகுதியான சென்னை சேப்பாக்கம் பகுதியில், அவரது மகன்கள்மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.தமிழரசு தலைமையில் சைக்கிள் பேரணியை திமுக நடத்துகிறது.
வரும் 25ம் தேதி இந்த சைக்கிள் பேரணி நடக்கவுள்ளது. திமுக அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக இந்தசைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது.
25-ம் தேதி காலை 9 மணிக்கு 5000க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கு பெறும் இந்த சைக்கிள் பேரணியை,கருணாநிதியின் மகனும், சென்னை மாநகராட்சி மேயர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
மற்றொரு மகன் மு.க.தமிழரசு பேரணிக்குத் தலைமை வகிக்கிறார். அமைச்சர் பொன்முடி, துணை சபாநாயகர் பரிதி.இளம்வழுதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த சைக்கிள் பேரணியில் முதல்வரின் இன்னொரு மகனான மு.க. அழகிரி கலந்து கொள்ளவில்லை. (அவருக்குசைக்கிள் ஓட்ட தெரியாதோ?).












Click it and Unblock the Notifications