ஜடேஜா, ஜெயா ஜெட்லி மகள் திருமணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Jadejaபதவி விலகிய சமதா கட்சி தலைவர் ஜெயா ஜெட்லியின் மகளை மணக்கிறார் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா.

நாட்டை பரபரப்பிற்கு உள்ளாக்கிய ஆயுத பேர ஊழலில் பணம் வாங்கியதால் சமதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியவர் ஜெயா ஜெட்லி.இவருடைய மகளான அதிதி ஜெட்லியை இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா காதலித்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே திருமணம் நடைபெற்று விட்டதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருந்தன. இதனை தொடர்ந்து மறுத்துவந்தார் ஜெயா ஜெட்லி.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இம்மாத இறுதியில் திருமணம் நடக்க உள்ளதாக ஜடேஜாவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அஜய் ஜடேஜா மன்னர் பரம்பரையை சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட்டில் முக்கியமான போட்டிகள் ரஞ்சி டிராபி மற்றும் துலீப் டிராபி போட்டிகள்.முன்னாள் இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ரஞ்சித்சிங்ஜி மற்றும் துலீப்சிங்ஜி ஆகியோரின் பெயரில் நடத்தப்படுபவை இவை.

செளராஷ்டிரா பகுதியின் மன்னர் பரம்பரையை சேர்ந்த இவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் அஜய் ஜடேஜா.

இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்த ஜடேஜா, கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது 2 போட்டிகளில் இந்திய அணியின்தலைவராக இருந்தார்.

ஆனால், கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் ஊழலில் தொடர்பு உள்ளதாக கூறி இவருக்கு 5 ஆண்டுகள் கிரிககெட் விளையாட தடை விதித்துள்ளது இந்தியகிரிக்கெட் வாரியம்.

இவர் மணக்க உள்ள பெண்ணின் தாயாரான ஜெயா ஜெட்லி தெகல்கா நிறுவனம் அம்பலப்படுத்திய ஊழலால் தனது கட்சித்தலைவர் பதவியை இழந்தார்.

அது போல் ஜடேஜா கிரிக்கெட் விளையாட தடைசெய்யப்பட்டதும் தெகல்கா நிறுவனம் வெளிப்படுத்திய கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் ஊழலால் தான்என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+