புலிகள்-ராணுவம் சண்டை தீவிரம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை மட்டக்களப்பு பகுதியில், அடர்ந்த காட்டுப் பகதிகளில் அமைந்துள்ள புலிகளின் முக்கிய முகாம்கள் மீதுஇலங்கை விமானப் படையின் போர் விமானங்கள் கடும் தாக்குதல் நடத்தின. இதில் பெரும் எண்ணிக்கையிலானவிடுதலைப்புலிகள் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து, இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், மட்டக்களப்பில் உள்ளலெபனான் பேஸ் என்ற பகுதியில் தான் புலிகளின் முக்கிய முகாம்கள் உள்ளன. இங்க பதுங்குக் குழிகள் அமைத்துபுலிகள் பதுங்கியிருக்கின்றனர்.

இந்தப் பகுதியில் இலங்கை போர் விமானங்கள் வியாழக்கிழமை அதிகாலை தொடர் தாக்குதல் நடத்தின. இதில்புலிகள் தரப்பில் பலர் உயிரிழந்திருக்கலாம். ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்துத்தெரியவில்லை என்றார்.

புலிகளின் வானொலியான வாய்ஸ் ஆப் டைகர் செய்தியில், முல்லைத்தீவிலிருந்து சில கிலோ மீட்டர்தொலைவிலுள்ள திரிகோணமலை துறைமுகத்தில் புலிகள் தாக்குதல் நடத்தியதில் கடற்படை வீரர்கள் 11 பேர்கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்கும் விதமாக போர் விமானங்கள் மூலம் இலங்கை அரசு தாக்குதல்நடத்தியுள்ளது.

இலங்கையில் அமைதி ஏற்படுவதை சீர்குலைக்கும் வகையில் தான் இந்த போர் விமானத தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது என்றார்.

கடற்படை அதிகாரிகள் கூறுகையில், புலிகள் புதன்கிழமை திரிகோணமலை துறைமுகம் அருகே நடத்தியதாக்குதலில் எங்களது ஒரு படகு படுசேதமடைந்தது. 11 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர் என்றனர்.

யாழ்ப்பாணத்தில் 11 புலிகள் சாவு:

இதற்கிடையே, யாழ்ப்பாணத்தில் ராணுவ வீரர்களுக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 11 புலிகள்கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து இலங்கை ராணுவம் கூறுகையில், யாழ்ப்பாணம் அருகேயுள்ள நெடுன்கெரேனியில் ராணுவவீரர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் கடும் சண்டை நடந்தது.

இதில் 10 புலிகள் கொல்லப்பட்டனர். முகமலையில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் விடுதலைப்புலிஒருவர் கொல்லப்பட்டார் என்று கூறியுள்ளது.

15 கடற்புலிகள் பலி:

இந்நிலையில், இலங்கை கடற்படை வீரர்கள் கூறுகையில், புதன்கிழமை முல்லைத்தீவிலிருந்து சில கிலோ மீட்டர்தொலைவிலுள்ள திரிகோணமலை துறைமுகத்தில் புலிகள் நடத்திய தாக்குதலில் 11 கடற்படை வீரர்கள்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் சம்பவத்தில் 15 கடற்புலிகளும் கொல்லப்பட்டனர். 15 கடற்புலிகள்காயமடைந்தனர் என்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+