சிதம்பரம் தாக்கப்பட்ட வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை
திருச்சி:
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மாலாவிடுவிக்கப்பட்டார்.
1991-ம் ஆண்டு திருச்சி விமான நிலையம் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக அ.தி.மு.கவினர் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் அ.தி.மு.கவினரால் தாக்கப்பட்டார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ரத்தினவேல், முன்னாள் எம்.பி. ராஜரத்தினம், முன்னாள்எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், ஆரோக்கியசாமி சிவபதி, மாலா உள்ளிட்ட 64 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலரும் விடுவிக்கப்பட்டனர். ஒரு சிலருக்கு மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் அனைவருமேமாவட்ட கூடுதல் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மாலா வெளிநாட்டில் இருந்ததால் அவர் மீதான வழக்கு தனி வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.
மாலா வெளிநாட்டிலிருந்து வந்ததும் அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. தற்போது அவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தற்காலிமாக நீதிபதி உமா மகேஸ்வரி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
1991-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி சிதம்பரம் தாக்கப்பட்ட வழக்கில் மாலா சம்பந்தப்பட்டிருப்பதற்கான எந்த ஆதராமும் இல்லை.எனவே அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications