ஆசிரியர் காதலித்து ஏமாற்றியதால் மாணவி தற்கொலை
செஞ்சி (விழுப்புரம்):
ஆசிரியர் காதலித்து ஏமாற்றியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாள்.
இதையடுத்து, பொதுமக்கள் பள்ளிக்கூடத்துக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பள்ளியம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் செல்வி.வயது 15. செல்வி அங்குள்ள ஆதி திராவிடர் பள்ளியில் 10 ம் வகுப்புப் படித்து வந்தார்.
செல்வி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் பள்ளி ஆசிரியர் பூங்காவனம் செல்வியின் அழகில்மயங்கினார்.
இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் கடந்த 19 ம் தேதி ஆசிரியர் பூங்காவனத்தைத் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செல்வி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். செல்வியின் பெற்றோரும் இதற்கு சம்மதம்தெரிவித்து விட்டனர்.
இந்த விஷயத்தை செல்வி ஆசிரியர் பூங்காவனத்தைச் சந்தித்துத் தெரிவித்தார். இதைக் கேட்டதும்அதிர்ச்சியடைந்த பூங்காவனம், என்னால் உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார்.
இதையடுத்து அழுது புலம்பினாள் செல்வி. அவள் என்னால், ஆசிரியர் பூங்காவனத்தை மறக்க முடியாது.வாழ்வதை விட சாவதே மேல் என்று புலம்பினாள். அழுதது மட்டுமின்றி அரளி விதையை அரைத்துக் குடித்துவிட்டாள்.
மயங்கி விழுந்த நிலையில் செல்வியை அவளது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால்மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே செல்வி பரிதாபமாக இறந்தாள்.
இதையடுத்து செஞ்சி போலீசில் செல்வியின் சாவுக்குப் பூங்காவனம்தான் காரணம் என்று புகார் கொடுத்தார்செல்வியின் தந்தை ஏழுமலை.
பள்ளிக்கூடத்தில் போராட்டம்:
இந்த நிலையில் 50 க்கும் மேற்பட்ட செல்வியின் உறவினர்கள் மட்டும் பொதுமக்கள் செல்வி படித்த பள்ளிக்கூடத்துக்குள் சென்றனர்.
ஆசிரியர் பூங்காவனத்தைத் தாக்க முயற்சித்தனர். இதனால் பள்ளிக்கூடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதற்குள் பிற ஆசிரியர்கள், பூங்காவனத்தை இன்னொரு அறைக்குள் பத்திரமாகத் தங்க வைத்தனர். பிற்பகல்பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கேசவலு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இச்சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications