திமுகவுக்கு அடிகளார் மூலம் அடி கொடுத்த ராமதாஸ்
சென்னை:
திமுக அணியில் இருந்து வெளியே வந்த பின்னரும் கூட திமுகவுக்கு தொடர்ந்து பலவழிகளில் நோஸ்கட் கொடுத்துக் கொண்டிக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சித் தலவைர்ராமதாஸ்.
இப்போது அதிமுக அணியில் உள்ள ராமதாசின் நீண்ட கால நண்பர் வன்னியர் சங்கத்தலைவர் வன்னிய அடிகளார். இவர் ராமதாசுக்கு மிக நெருங்கியவர்.
ராமதாஸ் இருக்கும் அணியில் தான் அவரும் இருப்பார். ஆனால், ராமதாஸ் திமுகவைவிட்டு வெளியே சென்ற பின்னரும், அடிகளார் மட்டும் திமுக அணியில் தொடர்ந்துவந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.
ராமதாசிடமிருந்து வன்னிய அடிகளாரைப் பிரித்துவிட்டதாக சந்தோஷத்தில் இருந்ததுதிமுக. அவருக்கு சில இடங்களை ஒதுக்கித் தந்து வன்னிய வாக்குகளை அள்ளவும்திட்டமிட்டிருந்தது.
ஆனால், அடிகளார் திடீரென ராமதாசை சந்தித்துப் பேசினார். திமுகவுக்கு இது பெரும்அதிர்ச்சியைத் தந்துள்ளது.
திமுக கூட்டணியில் இப்போது உள்ள திருநாவுக்கரசு, வாழப்பாடி ராமமூர்த்திஆகியோர் அந்தக் கூட்டணியில் நீடிக்கலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் கூட்டணியை விட்டு வெளியே போய்விடக் கூடாதுஎன திமுக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச திட்டமிட்ட ராமதாஸ் தனதுநண்பரான அடிகாருக்கு சிக்னல் கொடுத்தார். அவர் உடனடியாக திமுகவிலிருந்துஅதிமுக அணிக்குத் தாவியுள்ளார்.
வன்னிய அடிகளார் வெளியேறிவிட்டதால், இப்போது வன்னியர் ஓட்டுகள்ை பெறவாழப்பாடி ராமமூர்த்தியை எப்பாடுபட்டாவது தன்னுடன் வைத்திருக்க வேண்டியநிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. அவர் 9 சீட் கேட்டு வருகிறார். அதை திமுகதராவிட்டால் தேர்தலில் அவ்வளவாக ஈடுபாடு காட்ட மாட்டார்.
ராமதாசிடமிருந்து வன்னிய ஓட்டுகளை இழுக்க வன்னிய அடிகளாரும்,வாழப்பாடியும் இருக்கின்றனர் என்ற நினைப்பில் இருந்த திமுகவுக்குக்கு இப்போதுபெரும் அடி கொடுத்திருக்கிறார் ராமதாஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications