கூட்டணி குறித்து கருணாநிதி - சண்முகம் ஆலோசனை
சென்னை:
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியைசந்தித்து தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சண்முகம் கூறியதாவது:
தேர்தல் கூட்டணி குறித்து கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். ஆனால் இன்னும் தி.மு.கதலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இணைவதா என்பது குறித்து முடிவு செய்யவில்லை.
மார்ச் 26-ம் தேதி நடக்கவிருக்கும் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தின் போது இறுதி முடிவு எடுக்கப்படும்.
எங்கள் கட்சி உறுப்பினர்களிடையே தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது தி.மு.க. தலைமையிலானகூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து குழப்பம் நிலவுகிறது.
தி.மு.க. தலைவர் எங்களுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் குறித்து கூறினார். எத்தனை தொகுதிகள் என நான்கூற விரும்பவில்லை என்றார்.
புதிய நீதிக்கட்சிக்கு கணிசமான தொகுதிகளை ஒதுக்குவதாக தி.மு.க. கூறியிருப்பதாக தெரிகிறது.
சண்முகத்துடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த கருணாநிதி கூறியதாவது:
நாங்கள் எத்தனை தொகுதிகள் ஒதுக்கத் தயாராக இருக்கிறோம் என சண்முகத்திடம் கூறினோம். அவர் தங்களுக்குஎத்தனை தொகுதிகள் வேண்டும் என கூறினார். தங்கள் கட்சி நிலை குறித்து சனிக்கிழமை தெரிவிப்பதாககூறியுள்ளார்.
அவர் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைவரா, மாட்டாரா என்பது எனக்கு தெரியாது. நாங்கள் புதியநீதிக்கட்சியின் பலத்தை குறைத்து எடை போட விரும்பவில்லை.
வாழப்பாடி ராமமூர்த்தி தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகள் போதாது என கூறியுள்ளார். இதையடுத்துகூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட இயலாது என அவருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications