155 தொகுதிகளில் திமுக போட்டி: கருணாநிதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருநாவுக்கரசு, வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கு திமுககூட்டணியில் இடமில்லை. அவர்கள் தவிர திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் கடந்த 10 நாட்களாக தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.ஒவ்வொரு நாளும் ஒரு கட்சியாக தொகுதிப் பங்கீடு முடிந்து வந்தது.

இப்போது முழு பட்டியலும் வெளியாகி விட்டது. இதில் நீண்ட காலமாக திமுகவுக்கு ஆதரவாக இருந்து வரும்வாழப்பாடி ராமமூர்த்தி, திருநாவுக்கரசு, சமீபத்தில் சேர முன்வந்த ஏ.சி.சண்முகம் ஆகியேர்புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில், சனிக்கிழமை மாலை திமுக தலைவர் கருணாநிதிசெய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:

திமுக 155 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிற தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்துஅளிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆதரவு நண்பர்கள் என்று 3 தொகுதிகள் ஒதுக்கியுள்ளோம். அது யார் என்பதை பின்னர் தெரிவிப்போம்.அது சிதம்பரம் அணியா என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

எங்களால் பகிர்ந்து கொள்ளக் கூடிய இடங்கள் என்று சில இடங்களைக் குறிப்பிட்டு சில கட்சிகளுக்குச்சொன்னோம் (எம்.ஜி.ஆர் அதிமுக, வாழப்பாடி, புதிய நீதிக் கட்சி). பின்னர் வந்து சொல்வதாகக் கூறிச்சென்றார்கள். ஆனால் வரவில்லை.

வாழப்பாடி ராமமூர்த்தி சனிக்கிழமை காலை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். கணிவாக இருந்தது. மாலையில்திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி அவரும், வன்னிய அடிகளார், தீரன் சேர்ந்து அறிக்கைவெளியிட்டுள்ளனர். இதுகுறித்துக் கருத்துக் கூற விரும்பவில்லை.

இந்தத் தொகுதிப் பட்டியல் இறுதியானது. இதில் ஏதாவது ஓரிரு இடங்களில் மாற்றம் இருக்கலாம். அதுவும் கூடதிமுகவுக்கான பங்கில் மட்டுமே.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு கூடுதலாக 1இடம் கொடுக்கப்பட்டுள்ளது. காரணம், பேச்சுவார்த்தை நடந்தபோதே,திமுக 155 இடங்களில் போட்டியிடுவது உறுதியானால் கூடுதலாக ஒரு சீட் தருகிறோம் என்று கூறியிருந்தோம்.அதன்படி கொடுத்துள்ளோம்.

புதிய நீதிக் கட்சி எங்கள் கூட்டணிக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அது எங்கள் தவறும் இல்லை.அவர்கள் வராததற்கு எண்ணிக்கை மட்டுமல்ல எண்ணம் கூட காரணம்.

ரஜினி காந்த்தை, ஸ்டாலின் சந்தித்து புதிதல்ல. அவர்கள் நண்பர்கள், அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள். என்னிடம்கூட சொல்லாமல்தான் ஸ்டாலின், ரஜினியைச் சந்தித்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அவரிடம்பேட்டி கண்டால் கூறுவார் என்றார் கருணாநிதி.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி நிலவரம்:

திமுக - 155.

மதிமுக- 21.

பா.ஜ.க. - 21.

புதிய தமிழகம் - 10.

விடுதலைச் சிறுத்தைகள் - 8.

மக்கள் தமிழ் தேசம் - 6.

திமுக ஆதரவு நண்பர்கள் -3.

தமிழக முஸ்லீம் ஐக்கிய ஜமாத் -3.

எம்.ஜி.ஆர்.கழகம் - 2.

முத்தரையர் சங்கம் -1.

தொண்டர் காங்கிரஸ் -1.

உழவர் உழைப்பாளர் கட்சி -1.

கொங்கு நாடு மக்கள் கட்சி -1.

பார்வர்ட் பிளாக் - 1.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+