தொகுதிப்பங்கீடு: திமுக - எம்ஜிஆர் அதிமுக பேச்சுவார்த்தை
சென்னை:
தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மீண்டும்தொடரும் என எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.தலைவர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்று கூடிய அக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்,
தி.மு.க. நமக்கு 2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கியுள்ளது. இதை ஏற்க முடியாது. சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்துள்ளசில ஜாதிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை விட அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.
மாநிலத்தின் நலனையும், மக்களின் நலன் கருதியும் தொகுதி பங்கீடு குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து இறுதி முடிவெடுக்கும் உரிமை கட்சி தலைவர் திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது என தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
நிருபர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசு கூறுகையில், தி.மு.க. தலைவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.அவர் எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுப்பார் என நம்புகிறேன். மனமிருந்தால் மார்க்கமுண்டு.
கருணாநிதி விரும்பினால் பா.ஜ.கவிடமிருந்து 2 தொகுதிகள் வாங்கி ம.தி.மு.கவுக்கு கொடுத்தது போன்ற முடிவைஎடுக்கலாம்.
எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. தே.ஜ.கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருகிறது அதில் எந்த விதமான மாற்றமும்கிடையாது.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் தி.மு.கவுக்கு அனுப்பப்படும்.கருணாநிதியிடமிருந்து அழைப்பு வந்த பின் பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications