தேர்தலில் ஜெ. போட்டியிட முடியாது: சிதம்பரம் சொல்கிறார்
சென்னை:
தன்னை கட்சியிலிருந்து தற்கால பதவி நீக்கம் செய்ததை வரவிருக்கும் தேர்தல்வரையிலாவது நிறுத்தி வைக்குமாறு தமிழ் மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைகுழுவை சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.கவுடன், த.மா.கா. தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டதை எதிர்த்துத.மா.காவிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற கட்சியைதுவங்கினார் முன்னாள் மத்திய நிதி அமைச்சகரும், த.மா.கா. கட்சியின் தலைவர்களில்ஒருவருமான ப. சிதம்பரம்.
த.மா.காவின் ஒழுங்கு நடவடிக்கை குழு சிதம்பரத்தை தற்காலிகமாக கட்சியிலிருந்துநீக்கி வைக்க முடிவு செய்தது.
இந்நிலையில் சிதம்பரம் தனது தற்காலிக பதவி நீக்கத்தை குறைந்தபட்சம் வரவிருக்கும்தமிழக சட்டசபை தேர்தல் வரையிலாவது நிறுத்தி வைக்குமாறும், ஊழல் வழக்குகளில்தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவுடன் தோர்தல்கூட்டணி வைத்துள்ளதால் ஏற்பட்டுள்ள சாதக, பாதங்களை சிந்தித்து பார்க்குமாறும்த.மா.கா.ஒழுங்கு நடவடிக்கை குழுவை கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் மாரிமுத்துவுக்குஎழுதியுள்ள கடித்தத்தில் சிதம்பரம் குறிப்பிட்டிருப்பதாவது:
நான் இந்த மாத துவக்கத்திலேயே தேர்தல் கூட்டணி குறித்து த.மா.கா. எடுத்துள்ளநிலை குறித்து அதிருப்தி தெரிவித்தேன்.
1996-ம் ஆண்டு ஜெயலலிதா மீது குற்றப்பத்திரிக்கை மட்டுமே தாக்கல்செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவருக்கு 3 வழக்குகளில் தண்டனைவழங்கப்பட்டுள்ளது. அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ 66 கோடி சொத்துசேர்த்தது வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை தேர்தலில் போட்டியிட சட்டம்அனுமதிக்காது. அவருக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைத்து அவர் தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஆளுனரால் அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க முடியுமா? இந்த பின்னணியில் ஜெயலலிதாவால் எப்படி நல்ல ஆட்சியைஅளிக்க முடியும்?
எனது இந்த கருத்தை த.மா.கா. தலைவர் மூப்பனாரிடம் தெரிவியுங்கள். இந்த விஷயம்குறித்து விவாதிக்க எனது அலுவலகத்துக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications