கோவை பண்ணையில் ராணுவ குதிரைகள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

ராணுவத்தில் பணியாற்றிய 50 ராணுவ குதிரைகள் கோவையில் உள்ள தனியார் பண்ணைக்கு பாதுகாப்புபராமரிப்பிற்கு வந்து சேர்ந்துள்ளன.

ராணுவத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற குதிரைகள் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டிற்குமருந்து பொருள் உற்பத்திக்காக கொண்டு அனுப்பி வைக்கப்படும். குதிரைக்கு குறிப்பிட்ட ஒரு மருந்தை செலுத்திஅதில் உருவாகும் புரோட்டீனைக் கொண்டு பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்கப்படும்.

இவ்வாறு மருந்து தயாரிக்கும் போது குதிரைகளின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நாளடைவில்அக்குதிரை இறந்து விடும். இவ்வாறு கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் இருந்த 20க்கும் மேற்பட்ட குதிரைகள் கவனிப்பின்றிஇறந்து போயின.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மத்திய சமூக நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி, குதிரைகளைக் காக்கநடவடிக்கை மேற்கொண்டார். இத்தகைய குதிரைகளைக் காக்க முன்வரும் நிறுவனங்களுக்கு அனுமதியும்வழங்கினார்.

இதனையடுத்து கோவையில் உள்ள என்.இ.பி.சி அக்ரோ பார்ம்ஸ் லிமிடெட் 50 குதிரைக் காக்க முன் வந்தது.கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் பயன்படுத்தப்பட்ட 60 குதிரைகள் கோவை மாவட்டம் குடிமங்கலம் அருகே பூளவாடியில்உள்ள என்.இ.பி.சி பண்ணைக்கு , லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இந்த குதிரைகளுக்கு அங்கு லாயம்அமைக்கப்பட்டு பராமரிப்பு துவங்கியுள்ளது.

இங்கு கொண்டு வரப்பட்ட குதிரைகளில் பெரும்பாலானவை ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டவை. சென்னையில்உள்ள பிப்பெட் ஆராய்ச்சி நிலையம், புளூகிராஸ் நிறுவனங்களும் குதிரைகளை அளிக்க ஒத்துழைப்பு வழங்கியது.இக்குதிரைகளை பராமரிக்க நாள் ஒன்றிற்கு ஒவ்வொரு குதிரைக்கும் ரூ. 500 வரை செலவாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+