எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வுக்கு கூடுதல் தொகுதிகள்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர்.அ.தி.மு.கவுக்கு தற்போது கொடுக்கப்பட்டுள்ளதொகுதிகளை விட அதிகமாக கொடுக்கலாமா என்பது குறித்து தி.மு.க. ஆலோசித்து வருகிறது என தமிழகமுதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தலைவர் திருநாவுக்கரசு தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என கேட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதுவரை புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், தமிழக முஸ்லிம் ஜமாத் ஆகிய கட்சிகள் தேர்தலில்போட்டியிடுவதற்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications